NSW மாநில ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு $500 voucher!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 31ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Students are seen walking to class at Toorak College in Melbourne.

Students in Victoria return to school on Monday amid Omicron. Source: AAP

  • நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவதால், வரும் வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • NSW  மாநிலத்தில் primary school-ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கென $500 voucher-ஐ (before & after school care) பெற்றோர் பெறவுள்ளனர். இதனைப் பெறுவதற்கு பெப்ரவரி 28ம் திகதி முதல் Service NSW app ஊடாக பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 
  • விக்டோரிய மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு 50,000 க்கும் மேற்பட்ட  air purifiers வழங்கப்பட்டுள்ளன. அதே போல் ஆசிரியர்கள் வெளியில் வகுப்புகளை எடுக்க அனுமதிக்கும்வகையில் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 
  • குயின்ஸ்லாந்தில் பள்ளிகள் ஆரம்பிக்கப்படும்போது, உயர்நிலைப் பள்ளிகளில் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் பள்ளிகளில் ​​பெரிய கூட்டங்களை நடத்துவது இடைநிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேற்கு ஆஸ்திரேலியாவில் விருந்தோம்பல் இடங்கள், பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் முதியோர் பராமரிப்பு இல்லங்கள் மற்றும் உட்புற பொழுதுபோக்கு இடங்களில் முழுமையாக கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை மாத்திரம் அனுமதிக்கும் செயற்பாடு இன்று ஆரம்பமாகிறது. 
  • தென்னாபிரிக்காவிலிருந்து கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்குப் பரவிய Omicron-இன் புதிய துணைத்திரிபு விரைவில் ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும்  13,026 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27 பேர் மரணமடைந்தனர். 2,779 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.  இவர்களில் 185 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,053 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8 பேர்  மரணமடைந்தனர். 873 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.  இவர்களில் 102 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக  504 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 31 January 2022 4:53pm
Updated 31 January 2022 5:08pm


Share this with family and friends