Latest

தெற்கு ஆஸ்திரேலிய பொதுப்போக்குவரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு $1,000 அபராதம்!

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

ADELAIDE PUBLIC TRANSPORT

Face masks are still mandatory on public transport across Australian states and territories. Source: AAP / MORGAN SETTE/AAPIMAGE

விக்டோரியாவில் 44 பேர், குயின்ஸ்லாந்தில் 24 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 25 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 104 இறப்புகள் பதிவாகியுள்ளன.

தெற்கு ஆஸ்திரேலிய பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, அடுத்த நான்கு வாரங்களுக்கு, பேருந்து, ரயில் மற்றும் டிராம் பயணிகளுக்கு கோவிட் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தவுள்ளனர்.

முகக்கவச கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை அல்லது $1,000 அபராதம் விதிக்கப்படலாம்.

ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில், பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது இன்னும் கட்டாயமாக உள்ளது.

விக்டோரியா அரசு மூன்று மில்லியன் N95 மற்றும் KN95 முகக்கவசங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளது.

அரசு நடத்தும் சோதனை மையங்கள், சமூக சுகாதார சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து வலையமைப்பு ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளன.

தற்போதைய கோவிட் அலை குயின்ஸ்லாந்தில் ஜூலை 25 அன்று உச்சத்தை எட்டியது. டிசம்பரில் அடுத்த அலை ஏற்படக்கூடும் என மாநில தலைமை சுகாதார அதிகாரி கணித்துள்ளார்.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட 10 மில்லியன் கோவிட் தொற்றாளர்கள் மற்றும் 12,355 இறப்புகள் பதிவாகியுள்ளன. அனைத்து தொற்றாளர்களின் சராசரி வயது 31 என்றும், இறப்புகளின் சராசரி வயது 83 என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்களில் அதிகளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காரணிகளில் கோவிட் தொற்று மூன்றாவது இடத்தில் உள்ளதாக புதிய ஆய்வு காட்டுகிறது. இருதய நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைந்தவர்களைக் காட்டிலும் அதிகமான உயிர்கள் கோவிட் தொற்று காரணமாக காவுகொள்ளப்பட்டிருக்கின்றன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 10,043 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 6,380 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 44 பேர் மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,141 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 24 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,965 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,853 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 650 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 பேர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக 509 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.

NT-இல் 216 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள். 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Find a COVID-19 testing clinic

Register your RAT results here, if you're positive

Here is some help understanding

Read all COVID-19 information in your language on the

Share
Published 9 August 2022 3:57pm
Updated 9 August 2022 4:17pm
Source: SBS


Share this with family and friends