- Northern Territory-இல் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் மூலம் புதிதாக 8 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஐவர் Robinson River பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இந்தப்பின்னணியில் Northern Territory-இன் Katherine மற்றும் Robinson River பகுதிகளில், ஆகக்குறைந்தது எதிர்வரும் திங்கட்கிழமை 6 மணி வரை முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் Northern Territory-இல் வாழ்பவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பூர்வீககுடி பின்னணி கொண்டவர்களே அதிகம் தொற்றுக்குள்ளாகிவரும் நிலையில் நிலைமை மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.
- விக்டோரியா மாநிலத்தில் முன்மொழியப்பட்டுள்ள pandemic laws-தொற்றுநோய் தொடர்பான சட்டங்களுக்கு எதிராக, மாநில நாடாளுமன்றத்திற்கு வெளியே தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திவருபவர்களை Premier Daniel Andrews கடுமையாக விமர்சித்துள்ளார். குறித்த சட்டமுன்வடிவு மீதான விவாதம் நாளை தொடரும்.
- Pfizer அதன் antiviral கோவிட்-19 மாத்திரையின் generic versions-ஐ அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இத்தொற்றினால் ஏற்படும் இறப்புகளைத் தடுக்க, வீட்டிலேயே ஆரம்பகால சிகிச்சையாக இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 916 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 231 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ACT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 6 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
குயின்ஸ்லாந்தில் புதிதாக தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.