விக்டோரியாவில் 24 பேர், குயின்ஸ்லாந்தில் 6 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 26 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 63 இறப்புகள் பதிவாகியுள்ளன.
NSW மாநிலத்தில் இம்மாதம் பதிவான அதிகபட்ச மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் அடுத்த இரண்டு மாதங்களில் புதிய கோவிட் அலை ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள பின்னணியில் இதற்கு அம்மாநிலம் தயாராகிவருகிறது. மாநிலத்தில் தற்போது சுமார் 2,500 தினசரி கோவிட் தொற்றுக்கள் பதிவாகின்றன.
BA.5 திரிபு புதிய தொற்றுக்ககளை உண்டாக்கும் அதேநேரம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதிய அலை முந்தைய அலைகளை விட மோசமாக இருக்க வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எதிர்காலத்தில் தொற்றுநோய்களுக்கு எதிராக நாடுகளைப் பாதுகாக்க உதவும் புதிய உலகளாவிய நிதியத்திற்கு ஆஸ்திரேலியா பங்களிக்கும் என்று சுகாதார அமைச்சர் Mark Butler தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கான சர்வதேச விமானங்களில் முகக்கவச கட்டுப்பாட்டை Qantas அகற்றியுள்ளது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 9,472 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 26 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 7,769 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 24 பேர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 1157 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,802 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 5,770 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,686 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.
ACT- இல் புதிதாக 1085 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NT-இல் புதிதாக 248 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.