Latest

குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் & ஊழியர்களுக்கு ஊதியக் குறைப்பு!!

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

ANNASTACIA PALASZCZUK SCHOOLS

Queensland Premier Annastacia Palaszczuk (centre) visits a high school in Ipswich. (file) Source: AAP / DAN PELED

விக்டோரியாவில் 10 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 14 பேர், குயின்ஸ்லாந்தில் 29 பேர் உட்பட குறைந்தது 60 COVID-19 இறப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளன.

குயின்ஸ்லாந்து மாநில அரசு அம்மாநிலத்திலுள்ள சுமார் 54,000 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற பள்ளி ஊழியர்களில் 900 பேருக்கு கோவிட் தடுப்பூசியை எடுக்கத் தவறியதற்காக ஊதியத்தில் "சிறிய அளவிலான தற்காலிகக் குறைப்பு" இருப்பதாகக் கூறி கடிதங்களை அனுப்பியுள்ளது.

ஆசிரியர்கள் "அவர்களின் முடிவின் விளைவுகளை" எதிர்கொள்கின்றனர் என்று பெடரல் முதியோர் பராமரிப்பு அமைச்சர் Anika Well Nine's Today நிகழ்ச்சியில் கூறினார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 6,690 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 3,359 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 2,612 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,685 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 936 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டஸ்மேனியாவில் புதிதாக 309 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ACT- இல் புதிதாக 296 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.

நவம்பரில் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் மற்றொரு கோவிட் பரவல் அலையை எதிர்கொள்ளக்கூடும் என அம்மாநில சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.

விமான பயணிகளின் எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய கால நிலைக்கு திரும்பவில்லை என்று சிட்னி விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி Geoff Culbert கூறுகிறார் .

2019 ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் சிட்னி விமான நிலையத்தை கடந்து சென்ற உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையில் 15.5 சதவிகிதம் சரிவையும், சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையில் 42.2 சதவிகிதம் சரிவையும் தரவு காட்டுகிறது.

Pfizerஐ தொடர்ந்து Moderna நிறுவனமும் Omicron-இன் BA.5 துணை திரிபு வகையை இலக்காகக் கொண்டு புதுப்பிக்கப்பட்ட தனது புதிய கோவிட் பூஸ்டர் தடுப்பூசி மருந்தை அங்கீகரிக்கும் விண்ணப்பத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளது.


கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


——————————————————————————————


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 24 August 2022 3:05pm
Updated 24 August 2022 5:24pm
By Selvi
Source: SBS


Share this with family and friends