மாநிலத் தலைவர்களின் கவனம் “மீள்வது எப்படி?” என்பதில்

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

(K-K) Fabie McGechan, Demitris van Maaren, Melanie Marsden na Joel Hutchings

Raia walio pata chanjo kamili, wachangia chakula nje mjini Sydney, Jumamosi, Septemba 25, 2021. Source: AAP Image/Dan Himbrechts

  • NSW மாநிலத்தில் 59.25 சதவீத மக்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்
  • விக்டோரிய மாநிலத்தில் Geelong மற்றும் Surf Coast முடக்கநிலை இன்று நள்ளிரவு முடிகிறது
  • ACTயில் புதிதாக 25 பேருக்குத் தொற்று உறுதி

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 961 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஒன்பது பேர் இறந்துள்ளார்கள்.  

Guildford, Auburn, Punchbowl, Penrith, Bankstown, Liverpool மற்றும் Bossley Park ஆகிய இடங்களில் தொற்று அதிகமாகப் பரவியுள்ளது என்று மாநில சுகாதாரத் துறையின் Dr Jeremy McAnulty கூறினார்.

முடக்க நிலை கட்டுப்பாடுகள் எவ்வாறு எப்போது நீக்கப்படும் என்ற திட்டம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும், தடுப்பூசி போடாதவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அதன் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் Premier Gladys Berejiklian கூறினார்.


 

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 779 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் இருவர் இறந்துள்ளனர்.

விக்டோரிய மாநிலத்தில் 16 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டதன் பின்னர் மெல்பன் மற்றும் மாநிலத்தின் பிராந்திய பகுதிகளில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் Premier Daniel Andrews அறிவித்தார்.  இந்த இலக்கு, செப்டம்பர் 28ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவர் தனது வீட்டிலிருந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் தூர எல்லை 15 கிலோமீட்டராக அதிகரிக்கப்படும்.  உடற்பயிற்சி செய்யவும், golf, tennis மற்றும் basketball போன்ற விளையாட்டுகள் விளையாடவும் அனுமதி வழங்கப்படும்.


 

கடந்த 24 மணிநேரத்தில்

  • ACTயில் 12 வயதிற்கு மேற்பட்டோரில் 85 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுள்ளார்கள்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 26 September 2021 1:11pm
Updated 12 August 2022 3:00pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends