NSW, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 53 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த மூன்று நாட்களில், பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் பற்றி கருத்துவெளியிட்ட பிரதமர் Scott Morrison, 'இது தொடர்ந்து காணப்படப்போகும் ஒரு விடயம்' என்று கூறியுள்ளார்.
புதிய தொற்றாளர்கள் அதிகமுள்ள நாடுகளில் கடந்த வாரம் உலகளாவிய ரீதியில் ஆஸ்திரேலியா நான்காவது இடத்தில் இருந்தது.
தெற்கு ஆஸ்திரேலியா மே 28 அன்று Community Vaccination Day-ஐ நடத்த உள்ளது. சில உள்ளூர் கவுன்சில்கள் மற்றும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கம், தடுப்பூசி கிளினிக்கிற்கு செல்வதற்கு உதவி தேவைப்படும் மக்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை வழங்கும்.
5-11 வயதுடைய குழந்தைகளுக்கு Pfizer தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க அமெரிக்க Food and Drug Administration அங்கீகரித்துள்ளது. ஆஸ்திரேலியா, 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியை அனுமதிக்கிறது.
நான்காவது தடுப்பூசியின் நன்மைகளை மதிப்பிடுவதற்கு கூடுதல் தரவு தேவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 12,297 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 14,220 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22 பேர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 1,179 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 7,082 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 16,253 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர். (இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன).
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,072 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.
ACT- இல் புதிதாக 1,098 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.