Latest

ஆஸ்திரேலியாவில் கடந்த 12 மாதத்தில் 339 பேர் நீரில் மூழ்கி மரணம்

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 16ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

NSW CORONAVIRUS COVID19

Police patrolling Bondi Beach on horseback in Sydney. (file) Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE

கடந்த ஜூன் 30 வரையான 12 மாதங்களில் நாட்டில் 339 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக Royal Life Saving Society மற்றும் Surf Life Saving Australia (SLSA) ஆகியவை தெரிவித்துள்ளன.

இது 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புக்களாகும்.

கோவிட்-19 பரவல் காரணமாக சிறுவர்கள் உரியமுறையில் நீச்சல் கற்றுக்கொள்ளமுடியாதமை மற்றும் அதிகரித்த மழைவீழ்ச்சி போன்றவை இந்த மரணங்களுக்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

மொத்த இறப்புகளில் 141 கடலுடன் தொடர்புடையவை. 43 இறப்புகள் வெள்ளம் தொடர்பானவை ஆகும்.
மாநிலங்களும் பிராந்தியங்களும் தங்களது வாராந்திர கோவிட்-19 எண்ணிக்கைகளை பகிரத் தொடங்கியுள்ளன.

கடந்த மாதம் மாநில மற்றும் பிராந்திய சுகாதார அமைச்சர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 ஆம் தேதியுடன் தினசரி கோவிட் அறிக்கைகளையும் எண்ணிக்கைகளையும் மாநிலங்களும் பிராந்தியங்களும் நிறுத்தியிருந்தன.
5-11 வயதுடைய குழந்தைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என்று நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) மீண்டும் கூறியுள்ளது.

இருப்பினும், இந்த வயதினருக்கான பூஸ்டர் தடுப்பூசியை TGA-சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் அங்கீகரித்தவுடன், ATAGI இதனை மதிப்பாய்வு செய்யும்.

ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான ஒப்புதலை ATAGI இன்னும் வழங்கவில்லை.

Moderna-வின் Spikevax தடுப்பூசி மாத்திரமே இந்த வயதினருக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே கோவிட்-19 தடுப்பூசியாக உள்ளது.
——————————————————————————————

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 16 September 2022 5:24pm
Updated 16 September 2022 5:26pm
Source: SBS


Share this with family and friends