நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 157 மரணங்கள் பதிவாகின!

கொரோனா வைரஸ் குறித்து ஜுலை மாதம் 29ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Telstra's Talking Loneliness report 46 per cent Australians felt lonelier during the lockdowns.

Telstra's Talking Loneliness report 46 per cent Australians felt lonelier during the lockdowns. Source: AAP Image/Diego Fedele

விக்டோரியாவில் 107 பேர், குயின்ஸ்லாந்தில் 17 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 22 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 157 இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 46,769 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, ஆஸ்திரேலிய புள்ளிவிவரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் கோவிட் காரணமாக 3,593 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகள் மருத்துவர்களால் சான்றளிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து 20,460 பேர் திரும்பவும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக NSW Health தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பாதி பேர் (10,846 பேர்) முதல்தடவையாக தொற்றுக்கு உள்ளாகி 90 நாட்களுக்குள் இரண்டாவது முறையாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

6 முதல் 12 செப்டம்பர் 2021 வரை நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் ஆய்வில் கிட்டத்தட்ட 3,000 ஆஸ்திரேலியர்கள் பங்கேற்றனர்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  14,927 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,898  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 107 பேர் மரணமடைந்தனர். 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 9,420 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 17 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,423 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  மூவர் மரணமடைந்தனர்

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,148  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  8 பேர் மரணமடைந்தனர். 

ACT- இல் புதிதாக  1007 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

NT-இல் 380 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 29 July 2022 4:06pm
Updated 29 July 2022 4:50pm


Share this with family and friends