NSW மாநிலத்தில் செவிலியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பம்!

கொரோனா வைரஸ் குறித்து பெப்ரவரி மாதம் 15ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Nurses hold placards during a nurses’ strike outside the NSW Parliament House in Sydney, Tuesday, February 15, 2022

Nurses protesting against understaffing and difficult work conditions outside NSW Parliament House in Sydney on 15 February 2022. Source: AAP Image/Bianca De Marchi

  • நியூசவுத் வேல்ஸ் மாநில பொதுமருத்துவமனை செவிலியர்கள் அதீத பணிச்சுமைக்கு எதிராகவும், சம்பள உயர்வு கோரியும் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.
  • சிட்னியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்பாக இன்று காலை 7 மணிமுதல் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இது 24 மணிநேரங்கள் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
  • செவிலியர்களின் இப்போராட்டம் ஏமாற்றமளிப்பதாக NSW சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • Novavax தடுப்பூசி இப்போது GP கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் அரசு நடத்தும் தடுப்பூசி மையங்களில் கிடைக்கிறது.
  • Novavax தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தமக்கான முதல் மற்றும் இரண்டாவது தடுப்பூசியாக போட்டுக்கொள்ளலாம். இது 18 வயதிற்குட்பட்டவர்களுக்கும், booster தடுப்பூசியாகவும் தற்போதைக்கு வழங்கப்படாது. 
  • இதுவரை தடுப்பூசி போடாமல் காத்திருந்தவர்கள் அல்லது மற்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, Novavax தடுப்பூசி புதிய தேர்வாக அமையும் என சுகாதார அமைச்சர்  Greg Hunt தெரிவித்தார். 
  • Novavax தடுப்பூசி எங்கெங்கெல்லாம் கிடைக்கிறது என்பதை  மூலம் கண்டறியலாம்.
  • விக்டோரியா மாநில நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணியாததற்காக எதிர்க்கட்சித் தலைவர் Matthew Guy-க்கு $100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு விக்டோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  • விக்டோரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளது.
  • டாஸ்மேனியாவில் கோவிட் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்குத் தேவையான உதவிகளை, ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை வழங்கும் என துணை Premier Jeremy Rockliff தெரிவித்தார்.
  • NSW,  குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியாவில் கோவிட் தொடர்பிலான 50 இறப்புகள் ஒரே நாளில் பதிவாகியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 8,201 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16 பேர் மரணமடைந்தனர். 1,583கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.  இவர்களில் 96 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 8,162 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர். 441 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 67 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,286 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர். 462 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 35 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 513 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.  

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில், புதிதாக 1138 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நால்வர் மரணமடைந்தனர். 219 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 15 February 2022 3:46pm
Updated 15 February 2022 3:51pm


Share this with family and friends