கட்டுப்பாடுகள்
- NSW மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்கு நாள் டிசம்பர் மாதம் முதலாம் தேதி என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நாள் இப்போது நவம்பர் மாதம் 8ஆம் நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஒரு இடத்தில் எத்தனை பேர் கூடலாம் என்ற கட்டுப்பாடுகள் (உடற் பயிற்சிக் கூடங்கள் மற்றும் நடன வகுப்புகள் தவிர்த்து மற்றைய இடங்களில்) நீக்கப்பட்டுள்ளன. முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்பது டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
- NSW மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குக் கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை தொடர்கின்றன.
- விரைவான அன்டிஜன் (antigen) சுய பரிசோதனைகளை என்பது குறித்த ஆலோசனையை விக்டோரிய மாநில சுகாதாரத் துறை வெளியிட்டது.
- மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக் கட்டுப்பாடுகளைத் தெற்கு ஆஸ்திரேலியா நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் நீக்குகிறது. அத்துடன், தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் ஏழு நாட்களாக குறைக்கிறது.
தடுப்பூசி குறித்த செய்திகள்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஆறு பேருக்கு வழங்கப்பட்ட Pfizer டையது என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்படி தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களை மாநில சுகாதாரத் துறை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது.
Covid-19 புள்ளிவிவரங்கள்
- விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 989 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளார்கள்.
- New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 173 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
- ACTஇல் சமூகப் பரவல் மூலம், புதிதாக எட்டுப் பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.