NSW மாநிலத்தில் முதல்தடவையாக புதியவகை BA.4 தொற்று பதிவானது!

கொரோனா வைரஸ் குறித்து ஏப்ரல் மாதம் 29ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

People living in the Australian capitals decreased and Regional Australia grew

Source: AAP Image/Bianca De Marchi

NSW, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 26 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதல்தடவையாக Omicron sub-lineage BA.4 தொற்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவிலிருந்து திரும்பிய ஒரு பயணி ஒருவரிடமே இத்தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே தென்னாபிரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் முதலில் கண்டறியப்பட்ட BA.4 மற்றும் BA.5 திரிபுகளைக் கண்காணித்து வருகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  11,903 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 11,083 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1,090 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   ஒருவர் மரணமடைந்தார்.

NT- இல் புதிதாக 428 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,477 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர். 

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 8,117 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர். 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,924 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர். 

ACT- இல் புதிதாக 1,072 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 29 April 2022 2:52pm
Updated 29 April 2022 2:57pm


Share this with family and friends