NSW மாநிலத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது, மெல்பனில் ஊரடங்கு, முடக்க நிலை நீடிப்பு

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

Bondi Beach in Sydney, Monday, August 16, 2021.

Sydney'de kurallara uymayan yüzlerce kişiye para cezası kesildi. Source: AAP Image/Bianca De Marchi

  • NSW மாநிலத்தில் வாழ்பவர்களுக்கு இரண்டு புதிய ஆதரவு கொடுப்பனவுகள் அறிமுகம்
  • மெல்பனில் முடக்க நிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
  • Northern Territory பிராந்தியத்தின் சில பகுதிகள் முடக்க நிலை
  • ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 19 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை.

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 478 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் ஐந்து பேர் தடுப்பூசி போடவில்லை.  தொற்றினால் ஏழு பேர் இறந்துள்ளார்கள்.

COVID-19 தொற்றின் அறிகுறிகளைக் கொண்டுள்ளவர்கள், தொற்று அதிகமாகப் பரவியிருக்கும் பகுதிகளில் வசிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு கிடைக்கலாம்.  மானியம் பெறுவதற்கு, அவர் தொழில் புரிபவராகவும் 17 வயதிற்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் மற்றும் பிற வருமான ஆதரவுக்குத் தகுதியற்றவர்கள், இப்போது செஞ்சிலுவைச் சங்கம் மூலம் புதிய .

சிட்னியில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கூடுதலாக 530,000 ஃபைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.  இந்தப் பகுதிகளில் வாழும் 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வாரம் தடுப்பூசி பெற முன்னுரிமை அளிக்கப்படும்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 22 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் ஐந்து பேருக்கு ஏற்பட்ட தொற்று, ஏற்கனவே அறியப்பட்ட தொற்றுகளுடன் தொடர்புடையவை அல்ல.  அத்துடன், தொற்றுள்ளவர்களில் எட்டுப் பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.

மெல்பனில் முடக்க நிலை செப்டம்பர் 2ஆம் தேதி, வியாழக்கிழமை இரவு 11.59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இன்றிரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு உட்பட அறிமுகமாகின்றன.

என்ற தரவுகளை காணலாம்.


 

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:

  • சமூகப் பரவல் மூலம், ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து டார்வின் பெருநகர் மற்றும் Katherine பிராந்தியத்தில் 72 மணிநேரம் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 19 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அங்கு அறிமுகமான முடக்க நிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
alc covid mental health
Source: ALC

 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 16 August 2021 3:04pm
Updated 12 August 2022 3:06pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends