- New South Wales மாநிலத்தில் 40.8 சதவீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள்.
- விக்டோரிய மாநிலத்தில் வீட்டு வாடகை கட்ட முடியாதவர்களுக்கு நிவாரணம்
- ACTயில் AstraZeneca தடுப்பூசி போடும் இடைவெளி காலம் குறைக்கப்பட்டது
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மேலதிக குடும்ப மருத்துவர்கள் ஃபைசர் தடுப்பூசி போட முடியும்
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,281 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 831 பேர் சிட்னியின் மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் வசிப்பவர்கள். தொற்றினால் மேலும் ஐந்து பேர் இறந்துள்ளார்கள்.
தொற்று ஏற்பட்டு மருத்துவ மனைகளுக்குக் கொண்டு செல்லப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை, மாநிலத்தில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்ட பின்னர் உச்சத்தைத் தொடு மென்று தமது கணிப்புகள் காட்டுகின்றன என்றும், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் மாற்றங்களை ஏற்படுத்தாது என்றும் Premier Gladys Berejiklian கூறினார்.
தொற்று கண்ட 177 பேர் மருத்துவமனைகளில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 67 பேருக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 246 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 121 பேருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியும்.
விக்டோரிய மாநிலத்தில், வருமானத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை வீட்டு வாடகை கட்டுவதற்கு செலவிடுபவர்களுக்கும், வாடகை வருமானத்தில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை இழந்த வீட்டு உரிமையாளர்களுக்கும் த்தை வீட்டுவசதி அமைச்சர் Richard Wynne அறிவித்தார்.
Australian Capital Territory
ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 11 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்டவர்களில் 7 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
கன்பராவில், AstraZeneca தடுப்பூசியின் முதற் சுற்றைப் போட்டுள்ளவர்கள் நான்கு வார இடைவெளியின் பின் இரண்டாவது சுற்றைப் பெறலாம். அல்லது, காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை தொலைபேசி மூலம் (02) 5124 7700 என்ற இலக்கத்தை அழைத்து அதற்கான முன் பதிவை செய்யலாம்.
கடந்த 24 மணிநேரத்தில்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தற்போது ஃபைசர் தடுப்பூசி வழங்குகிறார்கள். எதிர்வரும் நாட்களில் மேலும் 624 குடும்ப மருத்துவர்களும் இந்தத் தடுப்பூசி வழங்குவார்கள்.
- பிரித்தானியாவிலிருந்து 5 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் நேற்று, ஞாயிற்றுக் கிழமை, செப்டம்பர் 6ஆம் நாள் சிட்னிக்கு வந்து சேர்ந்தது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.