‘புதிய’ இயல்புநிலை டிசம்பர் 1 முதல் ! - NSW Premier எதிர்பார்ப்பு

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Birrong Leisure and Aquatic Centre

Public arrives at the Birrong Leisure and Aquatic Centre, after outdoor swimming pool were allowed to open today in Sydney, Monday, September 27, 2021. Source: AAP Image/Bianca De March

  • முடக்கநிலையை நீக்க மூன்று கட்ட திட்டம் NSW மாநிலத்தில்
  • விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மருத்துவர்களுக்கும் மருந்தகங்களுக்கும் ஊக்குவிப்புத் தொகை
  • ACTயில் தொற்று கண்ட ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 787 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 12 பேர் இறந்துள்ளார்கள். 

COVID safety plans பாதுகாப்பு முன்னெடுப்பு களை மேற்கொண்டுள்ள

வெளிப்புற நீச்சல் தடாகங்கள் திறக்கப்படலாம்,

கட்டுமானப் பணிகள் முழு திறனுடன் செயல் படலாம்.

மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அக்டோபர் 11ஆம் தேதி மேலும் தகர்த்தப்படுவதை உறுதிசெய்த Premier Gladys Berejiklian, 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் முடக்கநிலை எவ்வாறு நீக்கப்படும் என்பதில் சில மாற்றங்களையும் அறிவித்தார்.  80 சதவீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வரை பிராந்திய இடங்களுக்குப் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் எத்தனை பேர் கலந்து கொள்ளலாம் என்ற கட்டுப்பாடு 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் நீக்கப்படும்; அத்துடன் குழு விளையாட்டுகள் மீண்டும் தொடங்கலாம் மற்றும் ஒரு வீட்டில் 10 பேர் வரை கூடலாம்.

மூன்றாவது கட்டமாக, “Covid Normal” என்று அறியப்படும் ‘புதிய’ இயல்பு வாழ்க்கை 90 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் திரும்பும்.  அந்த இலக்கு டிசம்பர் 1ஆம் தேதி எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 705 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஒருவர் இறந்துள்ளார்.

தொற்று அதிகமாகப் பரவியுள்ள Moreland, Brimbank, Cardinia, Casey, Darebin, Greater Dandenong, Hobsons Bay, Melton, Whitlesea, Windsor, மற்றும் Hume உள்ளூராட்சிப் பகுதிகளில் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க மருத்துவர்களுக்கும் மருந்தகங்களுக்கும் ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் ஒன்றை Premier Daniel Andrews அறிவித்தார்.


 

Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 19 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஒருவர் இறந்துள்ளார்.
கன்பராவில், இரண்டு பேர் ஒரே நேரத்தில் மற்றொரு வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  பொழுது போக்கிற்காக அக்டோபர் 1ஆம் தேதி முதல் நான்கு மணிநேரம் வெளியே செல்லலாம்.




தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 27 September 2021 1:43pm
Updated 12 August 2022 3:00pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends