நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 163 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த ஜுன் மாதம் ஆரம்பித்த கோவிட் பரவலையடுத்து அங்கு ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.
புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 163 பேரில் 87 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 76 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இவர்களில் ஆகக்குறைந்தது 45 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
அதேநேரம் வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவும் இப்பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் மாநில சுகாதார அமைச்சர் Brad Hazzard கோரிக்கைவிடுத்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் 93,910 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.
புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.
இதுஒருபுறமிருக்க விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக தொற்றுக்கண்ட அனைவரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 10 பேர் நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் இருவர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சுமார் 22,700 பேர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் 39,846 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் இப்பரவல் விக்டோரியாவில் ஆரம்பித்திருந்தது.
இதேவேளை விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலைக்கு எதிராக சிட்னி மற்றும் மெல்பன் நகரங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
இதுஇவ்வாறிருக்க தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படடுள்ளது.
இதையடுத்து அங்கு நடைமுறைப்படுததப்பட்டுள்ள முடக்கநிலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தளர்த்தப்படும் வாய்ப்பு எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Highlights
- செய்தி மற்றும் தகவல்களை 63 மொழிகளில் பெற்றுக்கொள்ள:
- ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களுக்கு: , , , , , , .
- கோவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை உங்கள் மொழியில் பெற்றிட: .
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.