NSW மாநிலத்தில் பாதிப்பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், தொற்றாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

Sydney Olympic Park Vaccination Centre

People waiting to be vaccinated at the Sydney Olympic Park Vaccination Centre at Homebush in Sydney, Sunday, August 15, 2021. Source: AAP Image/David Gray

  • NSW மாநிலத்தில் வாழும் ஐந்து மில்லியன் மக்கள் முதல் சுற்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள்.
  • விக்டோரியா மாநிலத்தில் தடுப்பூசி போட மேலதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன
  • ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக இருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை.
  • நாட்டிற்கு, கூடுதலாக ஒரு மில்லியன் ஃபைசர் தடுப்பூசி இன்றிரவு வந்து சேரும்
 


 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 415 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் குறைந்தது 35 பேர், சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.

Blacktown, Mount Druitt, Merion, Maryland, Auburn மற்றும் Guildford புறநகர் பகுதிகளில் தொற்றுள்ளவர்கள் அதிகம் இருப்பதாக பதிவாகியுள்ளது.

NSW மாநிலத்தில் வாழும் மக்களில் 50 சதவீதமானவர்கள் முதல் சுற்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி போட்டவர்களுக்கு முடக்க நிலை கட்டுப்பாடுகளில்; சில சலுகைகள் வழங்குவது குறித்து மாநில அரசு ஆராய்ந்து வருவதாக Premier Gladys Berejiklian கூறினார்.

என்ற தரவுகளை காணலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 25 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் நான்கு பேருக்கு ஏற்பட்ட தொற்று, ஏற்கனவே அறியப்பட்ட தொற்றுகளுடன் தொடர்புடையவை அல்ல.  அத்துடன், தொற்றுள்ளவர்களில் 13 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.

மாநில அரசின் இணையத் தளத்தினூடாக மேலும் 84,000 பேர் தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்ய வழி செய்யப்பட்டுள்ளது என்று விக்டோரிய மாநில Premier Daniel Andrews கூறினார்.

என்ற தரவுகளை காணலாம்.


 

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை.  NSW மாநில எல்லையில் கூடுதல் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக இருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் ஒருவருக்குத் தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை.
  • ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள 40 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகள் தவிர, நாட்டிற்கு, கூடுதலாக ஒரு மில்லியன் தடுப்பூசிகளை வாங்குவதற்கு அரசு ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

 
 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

 
 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு  என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்
கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.



SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 15 August 2021 2:26pm
Updated 12 August 2022 3:06pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends