NSW மாநிலத்தில் நண்பர்கள் கூடலாம்; விக்டோரியாவில் தினசரி தொற்றாளர்கள் 600 தாண்டியது

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Extremists' blasted as hundreds march in Melbourne during another vaccine protest

Extremists' blasted as hundreds march in Melbourne during another vaccine protest Source: AAP/James Ross

  • NSW மாநிலத்தின் Byron, Kempsey மற்றும் Tweed பகுதிகளில் மீண்டும் முடக்கநிலை
  • விக்டோரிய மாநிலத்தில் தற்போது தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 6,000 ஆகியது
  • ACTயில் மன நல சேவைகளுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,022 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் பத்துப் பேர் இறந்துள்ளார்கள்.

மாநிலத்திலுள்ளவர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களில் 53 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகவும் பெற்றுள்ளனர்.

பிராந்திய உள்ளூராட்சிப் பகுதிகள் Byron Shire, Kempsey மற்றும் Tweed ஆகிய இடங்களில் இன்று மாலை 5 மணி முதல் ஏழு நாள் முடக்கநிலை அறிமுகப் படுத்தப்படுகிறது.  COVID-19 தொற்றுள்ள ஒருவர், சிட்னியிலிருந்து மாநிலத்தின் பல பிராந்திய இடங்களுக்குச் சென்றதைத் தொடர்ந்து இந்தக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

18 வயதிற்கும் குறைந்தவர்கள் இன்று முதல் ஒன்று கூட அனுமதிக்கப் படுகிறது.  மூன்று பேர் ஒரே நேரத்தில் சந்திக்கலாம் என்ற இந்த அறிவிப்பு சில நிபந்தனைகளுடன் நடைமுறைப்படுத்தப்படும்.  சந்திப்பவர்கள் 5 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் வாழ வேண்டும்; அவர்கள் வீட்டிலுள்ள பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்க வேண்டும்; மூன்று பேர் மட்டுமே ஒரே நேரத்தில் கூட முடியும்.

NSW மாநிலத்தில் Covid-19 முடக்க நிலை கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட வீசா இல்லாமல் அல்லது தற்காலிக வீசாவுடன் வாழ்பவர்களுக்கு, .


 

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 603 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் ஒருவர் இறந்துள்ளார்.

மெல்பன் பெருநகர், Geelong, the Surf Coast, Ballarat மற்றும் Mitchell Shire பகுதிகளிலுள்ள 186 கட்டுமான பணி இடங்களில் தொற்று ஏற்பட்டிருப்பது அடையாளம் காணப் பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு இரண்டு வார தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 403 தொற்றாளர்கள் இந்த இடங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என அடையாளாம் காணப்பட்டுள்ளது.

விக்டோரிய மாநிலத்தில் மூன்று இலட்சம் Moderna தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும்.


 

Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 16 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

ACTயில் மன நல சேவைகளுக்கும் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு சேவை வழங்கவும் 14 மில்லியன் டொலர் மேலதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ACT Chief Minister Andrew Barr அறிவித்தார்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 21 September 2021 1:10pm
Updated 12 August 2022 3:00pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends