Latest

NSW மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 20ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

NSW CORONAVIRUS COVID19 SAFE TRANSPORT

A worker cleans the carriage of a public train at Central Station in Sydney. (file) Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தவர்கள் டாக்ஸி மற்றும் rideshare சேவைகள் மற்றும் cruise terminal-களின் உட்புறப் பகுதிகள் உட்பட பொதுப் போக்குவரத்தில் பயணம்செய்யும்போது இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை.

தெற்கு ஆஸ்திரேலியாவில் இம்மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ள அதேநேரம், நியூ சவுத் வேல்ஸில் இம்மாற்றம் புதன்கிழமை நடைமுறைக்கு வருகிறது.

பொதுப் போக்குவரத்தில் முகக்கவச கட்டுப்பாட்டை நீக்கிய முதல் மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியா ஆகும்.

முகக்கவச கட்டுப்பாடுகள் மற்றும் பிற கோவிட் விதிகளை தனது அரசு மதிப்பாய்வு செய்து வருவதாக விக்டோரிய மாநில Premier Daniel Andrews கூறினார்.

இருப்பினும், ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள், தனியார் சுகாதார மையங்கள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் முகக்கவசம் அணிவது இன்னமும் கட்டாயமாக உள்ளது.

அறிகுறியற்ற கோவிட் நோயாளிகள் ஐந்து நாட்களுக்குப் பிறகு சுய-தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேசெல்லும்போது, அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதாவது ஆறாவது மற்றும் ஏழாவது நாட்களில் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்று தெற்கு ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பொது மருத்துவமனைகளில் ஜூன் மாதத்திற்குள் 18,700 க்கும் மேற்பட்டவர்களின் அறுவை சிகிச்சைகள் தாமதமாகிவிட்டதாக SMH தெரிவித்துள்ளது - கடந்த ஆண்டு டெல்டா முடக்கநிலையின்போது இருந்ததை விட இது ஒன்பது மடங்கு அதிகமாகும்.

கோவிட்-19 மற்றும் influenza வைரஸ்களை காற்றில் கண்டறியும் முகக்கவசத்தை சீன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

குறித்த முகக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார், வைரஸைக் கண்டறிந்த 10 நிமிடங்களுக்குள் சமிக்ஞைகளை அனுப்பும்.

"தொற்றுநோய் முடிந்துவிட்டது" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
——————————————————————————————
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 20 September 2022 2:05pm
Source: SBS


Share this with family and friends