NSW மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படுகின்றன; விக்டோரிய மாநில எல்லைகள் திறக்கப்படுகின்றன

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் ஏழாம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

SBS News in Macedonian 7 October 2021,

新州州長佩洛德(Dominic Perrottett)承認曾經穿著納粹服裝出席自己21歲生日會,事件擴大。 Source: AAP

  • விக்டோரிய மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் அரசு கவனம் செலுத்துகிறது
  • NSW மாநிலத்தில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்
  • உலகிலேயே அதிக வீதத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்ட மக்கள் வாழும் இடம் என்ற பெருமையை விரைவில் கன்பரா பெறப்போகிறது

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,638 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் இரண்டு பேர் இறந்துள்ளார்கள்.

NSW மாநிலத்தில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இல்லாத தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்கள் (Red Zones not in Lockdown) மற்றும் ACT பிராந்தியத்திலிருந்து மக்கள் .

ஊனமுற்றவர்கள், நாளை அக்டோபர் 8ஆம் தேதி முதல், மாநில தடுப்பூசி மையங்களில் முன் பதிவு இல்லாமல் தடுப்பூசி பெறலாம்.  தொற்று இருக்கும் உள்ள பகுதிகளில் இதற்காக பத்து தற்காலிக தடுப்பூசி மையங்களையும் அரசு நடத்தத் தொடங்கும்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 587 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் எட்டுப் பேர் இறந்துள்ளார்கள்.

மாநிலத்தில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள் என்பதால், கட்டுப்பாடுகளில் தளர்வுகளை Premier Dominic Perrottet அறிவித்தார்.

வீடுகளில் பத்துப் பேர் (சிறுவர்கள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை), மற்றும் வெளி இடங்களில் முப்பது பேர் எதிர்வரும் திங்கட்கிழமை அக்டோபர் 11ஆம் தேதி முதல் கூடலாம்.

வெளி இடங்களில் நடக்கும் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 100 பேர் வரை பங்கு கொள்ளலாம்.  உட்புற நீச்சல் தடாகங்கள் மீண்டும் திறக்கப்படலாம்.


 

Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 41 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நாட்டில், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 96 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டிருக்கும் முதல் அதிகார வரம்பு என்ற பெருமையை ACT பெறுகிறது..


கடந்த 24 மணி நேரத்தில்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இன்றும் யாருக்கும் சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்படவில்லை.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 7 October 2021 1:24pm
Updated 12 August 2022 3:00pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends