- Novavax கோவிட்-19 தடுப்பூசியின் முதல் தொகுதி சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் Novavax தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதியோர் பராமரிப்புத் துறை மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும்வகையில் 1700 ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இருப்பினும் பணியாளர் பற்றாக்குறையைப் போக்க இது போதுமானதாக இல்லை என சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்
- NSW மாநிலத்தில் booster தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தகுதியானவர்களில் 44 சதவீதம் பேர் அதனைப் போட்டுக்கொண்டுள்ளனர். விக்டோரியாவில் 46 சதவீதம் பேர் booster தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.
- விக்டோரியாவில் daycare செல்லும் 3-5 வயது வரையிலான குழந்தைகளையுடைய குடும்பங்களுக்கு வழங்கப்படும் antigen சோதனை உபகரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இவற்றை அவர்கள் வீடுகளுக்கு எடுத்துச்செல்லமுடியும் எனவும் மாநில என அரசு தெரிவித்துள்ளது.
- நாட்டின் பல மாநிலங்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதே வேளையில், கோவிட் தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் வீதம், ஒப்பீட்டளவில் Northern Territory-இல் மிக அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 9,690 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர். 2,068 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 132 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,785 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர். 575 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 72 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,178 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 12 பேர் மரணமடைந்தனர். 705 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 45 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 601 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.