Northern Territory-இல் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! முடக்கநிலை நீட்டிப்பு!!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 16ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Kiongozi wa Wilaya ya Kaskazini Michael Gunner amewahamasisha wakaazi wa NT wafanye vipimo na wachanjwe

Ministro Chefe do Território do Norte, Michael Gunner fez um apelo para que comunidades indígenas se vacinem. Source: AAP Image/Aaron Bunch

  • Northern Territory-இல் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் மூலம் தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதையடுத்து,  Greater Katherine-இல் 3 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை  ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்கண்டவர்கள் அனைவரும் பூர்வீககுடி பின்னணிகொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்தப்பின்னணியில் அனைத்து சமூகத்தினரரையும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுமாறு முதலமைச்சர் Michael Gunner வலியுறுத்தியுள்ளார்.
  • நியூசவுத் வேல்ஸிலிருந்து வருபவர்கள் வீடுகளில் தனிப்படுத்தப்படலாம் என்ற நிபந்தனையுடன், அம்மாநிலத்தவர்களுக்கான தனது எல்லையை குயின்ஸ்லாந்து  மீண்டும் திறந்துள்ளது. 
  • விக்டோரியாவின் St Basil's முதியோர் பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட கோவிட் பரவல் காரணமாக, பல முதியவர்கள் மரணமடைந்திருந்த பின்னணியில், இது குறித்த 5 வாரகால விசாரணை ஆரம்பிக்கிறது. 
  • கோவிட் தடுப்பூசி தொடர்பாக குழப்பமான சுகாதார செய்திகள் கிடைப்பதாகத் தெரிவித்து தமக்கு அதிகளவு அழைப்புகள் வருவதாகவும், தமக்கு வரும் அழைப்புகளில் கடந்த அக்டோபர் மாதம்முதல் 46 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் The Reading Writing Hotline தெரிவித்துள்ளது.
  • விக்டோரியாவில்  முன்மொழியப்பட்டுள்ள pandemic laws-தொற்றுநோய் குறித்த சட்டங்களுக்கு எதிர்ப்பு வலுத்துவரும் பின்னணியில் அம்மாநில நாடாளுமன்றம் இச்சட்டங்கள் தொடர்பில் விவாதித்துவருகிறது. 

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 797 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 212 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ACT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 12 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

NT-இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 9 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நியூசிலாந்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 222 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்கு கோவிட் பரவல் ஆரம்பித்ததுமுதல் பதிவான அதிகூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 16 November 2021 4:11pm
Updated 16 November 2021 5:02pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends