நியூசிலாந்து எல்லைக் கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் மாற்றம்!

கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதம் 01ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Wanawake wawili wakumbatiana katika uwanja wakimataifa wa Auckland, New Zealand, baada ya mmoja wao kuwasili kwa ndege kutoka Australia.

Wanawake wawili wakumbatiana katika uwanja wakimataifa wa Auckland, New Zealand, baada ya mmoja wao kuwasili kwa ndege kutoka Australia. Source: Brett Phibbs/New Zealand Herald via AP

மார்ச் 02  நள்ளிரவு 11.59 முதல், ஆஸ்திரேலியாவிலிருந்துவரும் நியூசிலாந்து குடிமக்கள், நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உட்பட தகுதிவாய்ந்த சில குறிப்பிட்ட பிரிவினர் தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகலாம்.

இவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பதுடன் வந்திறங்கியவுடனும் ஐந்தாவது அல்லது ஆறாவது நாளன்றும் கோவிட் சோதனையை மேற்கொள்வது கட்டாயமாகும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 37 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 8,874 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 1,098 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 49 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 6,879 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர். 255 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 46 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,453 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர். 316 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 957 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ACT- இல் புதிதாக 692 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 45 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 1 March 2022 3:05pm


Share this with family and friends