ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 57 பேர் மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து ஜுன் மாதம் 2ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

New South Wales and Queensland reported their lowest hospitalisations numbers in the past two months on Thursday.

Western Australia follows New South Wales, Victoria, South Australia and Queensland in providing free flu vaccine shots to residents. (file) Source: AAP Image/Bianca De Marchi

நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 57 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 1,066 பேர் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் உள்ளனர், 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் பதிவான மிகக்குறைந்த எண்ணிக்கை இதுவாகும்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 316 பேர் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் உள்ளனர். ஏப்ரல் 4ஆம் தேதிக்குப் பிறகு இவ்வெண்ணிக்கை குறைவாக  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கு ஆஸ்திரேலிய மக்கள் அனைவருக்கும் இம்மாத இறுதி வரை இலவச  flu தடுப்பூசி வழங்கப்படுகிறது.

குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியாவில் வசிப்பவர்களும் ஜூன் 30 வரை இலவச flu தடுப்பூசியைப் பெற முடியும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  7,583 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 23 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,204  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 765 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர் மரணமடைந்தார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,169 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 8,292 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  9 பேர் மரணமடைந்தனர்.(இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன).  

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,868  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக  874 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT-இல் புதிதாக  230 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 2 June 2022 5:13pm
Updated 2 June 2022 5:15pm


Share this with family and friends