விக்டோரியாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் குறித்து மே மாதம் 12ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Hospitalisations soar in QLD

Hospitalisations soar in QLD Source: AAP Image/Jono Searle

NSW, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும்  குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 55 இறப்புகள் பதிவாகியுள்ளன.

விக்டோரியா முழுவதும் புதிதாக கோவிட் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரேநாளில் 16,670 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நேற்றையதினம் பதிவான தொற்று எண்ணிக்கையைவிடவும் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.   

கோவிட்-19 தடுப்பூசி தகவல் மையங்கள் பின்வரும் shopping centres மற்றும் நிகழ்வுகளில் மே 15 வரை திறந்திருக்கும்.

  • NSW – Bankstown, Bankstown Central
  • NSW – Liverpool, Liverpool Plaza
  • QLD – Logan, Arndale Shopping Centre
  • QLD – Strathpine, Strathpine Centre
  • VIC – Keilor, Roxburgh Village
  • VIC – Pakenham, Arena Shopping Centre
  • NT – Casuarina Square, Casuarina Square SC
  • SA – Adelaide, Blakes Crossing Shopping Centre
SARS-CoV-2 இன் அனைத்து அறியப்பட்ட மற்றும் எதிர்கால திரிபுகளுக்கு எதிரான் தடுப்பூசியை உருவாக்க சிட்னி பல்கலைக்கழகம் இந்தியாவின் Bharat Biotech மற்றும் சுவிட்சர்லாந்தின் ExcellGene SA உடன் இணைந்து ஆய்வில் இறங்கியுள்ளது.

mRNA தடுப்பூசிகளின் நான்காவது சுற்று, 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதாக, UK தடுப்பூசி பணிக்குழு மற்றும் சுகாதார ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவில் முதல் கோவிட் தொற்றுச் சம்பவம் அடையாளம் காணப்பட்டதையடுத்து "கடுமையான நெருக்கடி நிலை" அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  12,600 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 23 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 14,333  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக  1,058 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர் மரணமடைந்தார். 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 7,271  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 16,670 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.(இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன). 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,696  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக 1,132 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share
Published 12 May 2022 3:57pm
Updated 12 May 2022 4:23pm


Share this with family and friends