Booster தடுப்பூசிக்கான கால இடைவெளி மற்றும் முகக்கவச கட்டுப்பாடு தொடர்பில் அமைச்சரவை ஆராய்கிறது!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 22ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Prime Minister Scott Morrison speaks to the media during a community breakfast on Bribie Island, north of Brisbane, Tuesday, December 21, 2021. (AAP Image/Albert Perez) NO ARCHIVING

Prime Minister Scott Morrison and state leaders held a meeting of national cabinet on Wednesday. Source: AAP

  • NSW மாநிலத்தில் மீண்டும் அதியுச்சமாக 3763 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் அதிகளவானோர் கோவிட் சோதனையை மேற்கொண்டுவருவதால் சோதனை கிளினிக்குகள் திக்குமுக்காடிப்போயுள்ளன.
  • கோவிட் தொற்றுக்குள்ளான 302 பேர் NSW மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களில் 40 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
  • இன்று நடைபெறும் தேசிய அமைச்சரவை கூட்டத்தின்போது, booster தடுப்பூசிக்கான கால இடைவெளி குறித்து NSW Premier Dominic Perrottet   கேள்வியெழுப்பவுள்ளார்.
  • நாடு முழுவதும் கோவிட் பரவல் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவச கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தலாமா என்பது தொடர்பிலும் booster தடுப்பூசிக்கான கால இடைவெளியை மேலும் குறைக்கலாமா எனவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படுகிறது.
  • ஆஸ்திரேலியாவில் ஒரு நாளைக்கு 200,000 கோவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்படக்கூடும் என்ற எதிர்வுகூறல், 'சாத்தியமில்லை' என பிரதமர் Scott Morrison தெரிவித்துள்ளார். 
  • திரையரங்குகளுக்குச் செல்பவர்கள் மற்றும் விருந்தோம்பல் துறை பணியாளர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு வியாழன் காலை 5:00 மணி முதல் நடைமுறைக்கு வருவதாக குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk அறிவித்துள்ளார்.
  • கோவிட்-19 இன் Omicron திரிபிற்கு எதிரான booster தடுப்பூசியை உருவாக்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று Moderna தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,503 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.

New South Wales மாநிலத்தில் புதிதாக 3,763 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவர்  மரணமடைந்தனர்.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT- இல் புதிதாக 58 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 186 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 22 December 2021 1:56pm


Share this with family and friends