நாட்டில் மூன்றாவது சுற்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடு தொடங்கியது

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் எட்டாம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

A $44 million package has been unveiled to revitalise Melbourne's CBD as workers and visitors return after the city's sixth lockdown.

A $44 million package has been unveiled to revitalise Melbourne's CBD as workers and visitors return after the city's sixth lockdown. Source: AAP

சிறப்பம்சங்கள்

  • நாட்டில் மூன்றாவது சுற்று தடுப்பூசி (booster shot) வழங்கும் அரசின் திட்டம் இன்று அதிகார பூர்வமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது.  18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும், தடுப்பூசியின் இரண்டு சுற்றுகளைப் பெற்ற ஆறு மாதங்களுக்குப் பின்னர் booster தடுப்பூசியைப் பெறலாம்.
  • அல்லது என்ற இணையத்தளங்களினூடாக மூன்றாவது சுற்றுத் தடுப்பூசிக்கான முன்பதிவை செய்யலாம்
  • மெல்பன் நகரின் மையப் பகுதி புத்துயிர் பெற வைப்பதற்காக, 5 மில்லியன் டொலர் செலவில் வாரத்தின் நடுப்பகுதியிலும் வெளியில் உணவகங்களில் உண்பவர்களுக்கு சலுகை என்பது உட்பட, 44 மில்லியன் டொலர் செலவில் பல திட்டங்களை விக்டோரிய மாநில அரசு அறிவித்தது.
  • மருந்தகங்களில் COVID-19 Pfizer தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படும்.
  • தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்ட NSW மாநிலத்தவருக்குக் கட்டுப்பாடுகள் இன்று முதல் மேலும் தளர்த்தப்படுகின்றன.  வீடுகளில் அல்லது வெளிப்புறக் கூட்டங்களில் எத்தனை பேர் கூடலாம் என்ற எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை.
  • வீட்டிலேயே செய்யக்கூடிய விரைவான அன்டிஜன் சோதனைகளை இலவசமாக விக்டோரிய மாநில அரசு பாடசாலைகளுக்கு வழங்குகிறது.

Covid-19 புள்ளிவிவரங்கள்

  • விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,126 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளார்கள்.
  • New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 187 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 8 November 2021 2:10pm
By Kulasegaram Sanchayan


Share this with family and friends