மெல்பன் நகர் முடக்கநிலையிலிருந்து மீண்டது; Qantas சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குகிறது

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 22ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Melbourne emerges from lockdown.

Melbourne has emerged from the world's longest lockdown, and as vaccination rates continue to rise. Source: AAP


  • விக்டோரியா மாநிலத்தில் முடக்கநிலை முடிவுக்கு வந்தது, ஆனால் புதிதாக 2,189 பேருக்குத் தொற்று, 16 பேர் மரணம்
  • திட்டமிட்டதற்கு முன்னராகவே சர்வதேச விமானப் பயணத்தை Qantas மீண்டும் தொடங்குகிறது
  • சிங்கப்பூருடன் ஒரு Travel Bubble உருவாக்கும் திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அரசு இருப்பதாகப் பிரதமர் அறிவித்தார்

விக்டோரியா

மிக நீண்ட காலம் முடக்க நிலையில் இருந்த நகர் என்ற பெயர் பெற்றிருக்கும் மெல்பன் நகர் முடக்கநிலையிலிருந்து மீண்ட அதே நாள், விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,189 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

முன்னர் கணித்ததற்கு ஒரு வாரம் முன்னராகவே, அக்டோபர் 30ஆம் தேதி, விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதமாகும் என தற்போதைய கணிப்புகள் சொல்கின்றன.

வெளி நாடுகளிலிருந்து நவம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னர் விக்டோரிய மாநிலம் வரும் நம் நாட்டவர், தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருந்தால், தனிமைப்படுத்தப் பட்டிருக்கத் தேவையில்லை என்று Premier Daniel Andrew அறிவித்தார்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 345 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.  கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதால், தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் வேலைகள் ஆரம்பித்து விட்டதாக இன்று காலை சிட்னி விமான நிலையத்திலிருந்து பேசிய Premier Dominic Perrottet கூறினார்.  Qantas விமான நிறுவனம், அதன் ஊழியர்களை அடுத்த வாரத்திலிருந்து மீண்டும் பணியில் ஈடுபடவைக்கப் போகிறது என்ற செய்தியை அவர் வரவேற்றார்.

தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இல்லாத பயணம் மேற்கொள்ள சிங்கப்பூருடன் ஒரு Travel Bubble உருவாக்கும் திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அரசு இருப்பதாகவும் அடுத்த சில வாரங்களில் இது செயலுக்கு வரும் என்றும் பிரதமர் அறிவித்தார்.


Australian Capital Territory

ACTயில் 12 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 84 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விட்டார்கள்.  சமூகப் பரவல் மூலம், புதிதாக 13 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.  ஆனால், Logan என்ற இடத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.  குயின்ஸ்லாந்து மாநிலத்தில், நாளை சனிக்கிழமை, ஒரே நாளில் 100 பாடசாலைகளில் அதிக பேருக்கு தடுப்பூசி வழங்க ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 22 October 2021 1:18pm
Updated 22 October 2021 2:18pm
By Kulasegaram Sanchayan


Share this with family and friends