மேற்கு ஆஸ்திரேலியாவில் அத்தியாவசிய பணியாளர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளில் தளர்வு

கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதம் 10ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Pre school teacher helping children to put on shoes indoors in cloakroom at nursery, coronavirus concept.

Children from year 3 must wear a face mask while indoor in Western Australia. Source: Getty Images / Halfpoint Images

மேற்கு ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்கள் மற்றும் முக்கியமான பணியாளர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகள் இன்று முதல் தளர்த்தப்படுகின்றன.

அவர்கள் கோவிட்-19 தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தபோதிலும்கூட வேலைக்கு அல்லது பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தினமும் antigen சோதனையை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

முக்கியமான தொழிலாளர்களில் போக்குவரத்து, உணவு உற்பத்தி, பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை மையங்கள், பெட்ரோல் நிலையங்கள், விவசாயம், சுரங்கம், கட்டுமானம், முதியோர் பராமரிப்பு மற்றும் பள்ளிகள் என்பவற்றில் வேலை செய்பவர்கள் அடங்குகின்றனர்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா,தெற்கு ஆஸ்திரேலியா, NT மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 22 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 16,288 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.991 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 39 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 7,779 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8 பேர் மரணமடைந்தனர். 188 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,571 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர். 252 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 17 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 1,167 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ACT- இல் புதிதாக 821 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 37 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,590 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.91 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 13 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,535 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 80 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

NT- இல் புதிதாக 326 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 33 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 10 March 2022 5:03pm
Updated 10 March 2022 5:43pm


Share this with family and friends