NSW மாநிலத்தின் Cowraவில் முடக்கநிலை அறிமுகம்

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Cowra township, Lachlan River Valley (from hill)

The regional town of Cowra in NSW. Source: Getty Images/ The Image Bank RF

  • NSW மாநிலத்தின் Cowraவில் இன்று மாலை 5 மணி முதல் முடக்கநிலை
  • விக்டோரிய மாநிலத்தில் மேலும் பலர் தடுப்பூசி போடலாம்
  • ACTயில் 12 முதல் 15 வயதானவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி கிடைக்கிறது
  • Northern Territory பிராந்தியத்திற்கு தொற்றுள்ள ஒருவர் சென்றுள்ளார்

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 935 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் நான்கு பேர் இறந்துள்ளார்கள்.

மாநிலத்திலுள்ளவர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களில் 52.7 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகவும் பெற்றுள்ளனர்.

Cowraவில் ஒன்பது வயது சிறுவன் ஒருவனுக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  காணப்பட்டுள்ளன.  இந்தப் பிராந்திய நகரத்தில் இன்று மாலை 5 மணி முதல் முடக்கநிலை அறிமுகப் படுத்தப்படுகிறது.  யாராவது கடந்த திங்கட்கிழமை, செப்டம்பர் 13 அல்லது அதற்குப் பின்னர் Cowraவிற்கு சென்றிருந்தால் “வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு” இருக்குமாறு கேட்கப்படுகிறார்கள்.  தொற்று எங்கிருந்து வந்தது என்பது இன்னமும் கண்டுபிடிக்கப் படவில்லை.

NSW மாநிலத்தின் மேற்குப் பகுதியிலுள்ள Dareton என்ற இடத்தில், கழிவு நீரில் Covid-19 கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.


 

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 567 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் ஒருவர் இறந்துள்ளார்.

விக்டோரிய மாநிலத்தில் மேலதிகமாக 4,800 AstraZeneca தடுப்பூசிகளும் 2,000 ஃபைசர் தடுப்பூசிகளும் கிடைக்கின்றன என்று கூறிய Premier Daniel Andrews, ஃபைசர் தடுப்பூசி அக்டோபர் மாதத்தில் கிடைக்காமல் போகலாம் என National Cabinet எச்சரித்துள்ளதால், தடுப்பூசி தேவைப்படுபவர்கள் தாமதப்படுத்தக் கூடாது என்று கூறினார்.

மாநிலத்திலுள்ளவர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களில் 71.2 சதவீதத்தினர் ஒரு சுற்று தடுப்பூசியும் 43.5 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகவும் பெற்றுள்ளனர்.


 

Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக ஏழு பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  ACTயில் உள்ளவர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களில் 55 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகவும் பெற்றுள்ளனர் என்று ACT Chief Minister Andrew Barr கூறினார்.

12 முதல் 15 வயதானவர்கள் ஃபைசர் தடுப்பூசி பெற முன் பதிவு செய்யலாம்.


 

கடந்த 24 மணி நேரத்தில்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் வழியாக Northern Territory பிராந்தியத்திற்கு சென்ற ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 20 September 2021 2:02pm


Share this with family and friends