NSW மாநில Orange / Glen Innes முடக்க நிலைக்கு முற்று; தொற்றாளர் எண்ணிக்கையில் விஞ்சியது விக்டோரிய மாநிலம்

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Protesters are seen at a demonstration against mandatory Covid-19 vaccinations and a two week shutdown of the construction industry at the Shrine of Remembrance in Melbourne, Wednesday, September 22, 2021.  (AAP Image/James Ross) NO ARCHIVING

Protesters are seen at a demonstration against mandatory vaccinations and the construction industry shutdown in Melbourne, Source: AAP/James Ross

  • NSW மாநிலத்தின் Grafton பகுதியில் வாழ்பவர்கள் Covid சோதனை செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்
  • விக்டோரிய மாநிலத்தில் தற்போது 6,666 பேருக்குத் தொற்று
  • ACTயில் ஏழாவது வாரமாக முடக்கநிலை
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,063 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளார்கள்.

Orange மற்றும் Glen Innes உள்ளூராட்சிப் பகுதிகளில் முடக்க நிலை இன்று முடிவுக்கு வருகிறது.  Narromine உள்ளூராட்சிப் பகுதியில் முடக்க நிலை எதிர்வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 25ஆம் தேதி முடிவுக்கு வரும்.

NSW மாநிலத்தின் வடக்குப் பகுதியிலுள்ள Grafton பகுதியில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.


 

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 766 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று பரவ ஆரம்பித்த நாட்களிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மிக அதிகமானது இதுவாகும்.  தொற்றினால் மேலும் நான்கு பேர் இறந்துள்ளனர்.

விக்டோரிய மாநிலத்திலுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், சிறுவர் பராமரிப்பில் ஈடுபட்டோர் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது அக்டோபர் 18ஆம் தேதிக்கு முன்னர் போட்டிருக்க வேண்டும்.  மருத்துவ காரணங்களுக்காகத் தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  மேற் கூறிய அனைவரும் நவம்பர் 29ஆம் தேதிக்கு முன்னர், தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்க வேண்டும்.

தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருப்பவர்கள் சிட்னியிலிருந்து விக்டோரிய மாநிலம் திரும்ப செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள்.  மாநிலம் திரும்புவதற்கு 72 மணி நேரத்திற்குள் சோதனை செய்து தொற்று இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும், அத்துடன் மாநிலம் திரும்பிய பின்னர் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.


 

Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 16 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  மொத்தமாகத் தொற்றுள்ளவர் எண்ணிக்கை 674ஆக உயர்ந்துள்ளது.

12 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், இன்று முதல் மருந்தகங்களில் Moderna தடுப்பூசியைப் பெறலாம்.


 

கடந்த 24 மணிநேரத்தில்

  • கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களுக்கு முன்னதாக, விடுதிகளில் கட்டாயமாகத் தனிமைப் படுத்தப்பட்டு இருக்காமல் சர்வதேச பயணத்தை அனுமதிக்க ஏதுவாக, தடுப்பூசி கடவுச் சீட்டு உட்பட, தேவையானவற்றை அரசு தயார் செய்து வருகிறது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் Dan Tehan கூறினார்.



தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share
Published 23 September 2021 1:23pm
Updated 12 August 2022 3:00pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends