ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 60 பேர் மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து ஜுன் மாதம் 30ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

A supplied image of ICU staff at St Vincents Hospital caring for a COVID-19 positive patient in the ICU of St Vincents Hospital in Sydney.

Source: AAP Image

விக்டோரியாவில் 17 பேர், குயின்ஸ்லாந்தில் 10 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 23 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 60 இறப்புகள் பதிவாகியுள்ளன.

குயின்ஸ்லாந்தில் கோவிட் தொற்றுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

அதேநேரம் கோவிட் தொற்றுடன் ACT மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை வியாழனன்று 122 ஆக பதிவாகியுள்ளது.

முன்னைய அரசால் மேற்கொள்ளப்பட்ட கோவிட் தடுப்பூசி கொள்வனவு தொடர்பிலான மதிப்பாய்வை மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் Mark Butler அறிவித்துள்ளார்.

தற்போதைய ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள கையிருப்பை எதிர்வரும் வாரங்களில் மதிப்பாய்வு செய்ய விரும்புவதாக Mark Butler கூறினார்.

Omicron-இன் துணை திரிபுகளைக் குறிவைக்கும் தடுப்பூசிகளுக்கான விண்ணப்பங்களை TGA மதிப்பாய்வு செய்து வருவதாக சுகாதார அமைச்சர்  Mark Butler கூறினார்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி விண்ணப்பத்தை Pfizer நிறுவனம் சமர்ப்பிக்க அனுமதித்துள்ளதாக அமைச்சர் கூறினார். ​Moderna-விடமிருந்து கிடைத்த இதேபோன்ற விண்ணப்பத்தை தற்போது TGA  மதிப்பாய்வு செய்கிறது.

இலவச flu தடுப்பூசிகளுக்கான காலக்கெடுவை NSW ஜூலை 17 வரை நீட்டித்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நான்கில் ஒருவருக்கு மட்டுமே மாநிலத்தில் flu தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தரவு காட்டுகிறது. அதேநேரம் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தவர்கள் ஜூலை 31 வரை இலவச flu தடுப்பூசிகளைப் பெறலாம்.

தெற்கு ஆஸ்திரேலியா Munno Para-வில் உள்ள தடுப்பூசி மையத்தை ஜூலை 1ஆம் தேதியும், Adelaide Myer Centre, Kilkenny மற்றும் Enfield தடுப்பூசி மையங்களை ஜூலை 2ஆம் தேதியும் மூடுகிறது. கோவிட்-19 தடுப்பூசிகள் தொடர்ந்தும் GP கிளினிக்குகள், மருந்தகங்கள் அல்லது பிற SA Health தடுப்பூசி மையங்களில் கிடைக்கின்றன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  11,504 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 23 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,926  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 17 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1268 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,286 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 5,548 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  7 பேர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,129  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT- இல் புதிதாக  1250 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

NT-இல் புதிதாக  354 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 30 June 2022 2:18pm


Share this with family and friends