அதிகரிக்கும் கோவிட் தொற்று! Booster போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்!!

கொரோனா வைரஸ் குறித்து ஜுன் மாதம் 29ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

A drive through patient gets vaccinated at the new western health drive through Covid-19 vaccination centre in Melton.

A drive through patient gets vaccinated at the new western health drive through Covid-19 vaccination centre in Melton. Source: AAP Image

விக்டோரியாவில் 23 பேர், குயின்ஸ்லாந்தில் 20 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 11 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 59 இறப்புகள் பதிவாகியுள்ளன.

NSW இல் 11,607 புதிய COVID-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன - இது மே 19 க்குப் பிறகு மிக அதிகமாக உள்ளது.

ACT 1,458 புதிய நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது - இது கடந்த நான்கு மாதங்களில் மிக அதிகமானதாகும்.

நாட்டில் புதிய கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருவதால், தகுதியான ஆஸ்திரேலியர்கள் மூன்றாவது அல்லது நான்காவது பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் Mark Butler வலியுறுத்தியுள்ளார்.

குறைந்த பட்சம் மூன்றுசுற்று தடுப்பூசியை போட்டிருந்தாலேயொழிய, ஓமிக்ரான் திரிபிற்கு எதிராக மக்கள் முழுமையாகப் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்பது சுகாதார ஆலோசனையாகும்.

அதேநேரம் தங்கள் குழந்தைகளுக்கு flu தடுப்பூசியைப் போடுமாறும் அமைச்சர் Mark Butler பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.

Flu-உடன் தொடர்புடைய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
45-54 மற்றும் 55-69 வயதிற்குட்பட்டவர்களுக்கு long COVID தாக்கும் அதிக ஆபத்து உள்ளதாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

Nature Communications வெளியிட்ட ஆய்வில், ஆண்களை விட பெண்களுக்கு long COVID அறிகுறிகள் உருவாகும் ஆபத்து அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு வாரங்களில் சில கோவிட் தடுப்பூசி மையங்களை மூடுகிறது. தடுப்பூசி மையத்திற்குச் செல்வதற்கு முன் SA Health இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விக்டோரியா இலவச flu தடுப்பூசிகளுக்கான காலக்கெடுவை ஜூன் 30 இலிருந்து ஜூலை 10 வரை நீட்டித்துள்ளது. அதேநேரம் டாஸ்மேனிய மாநிலத்தவரர்கள் ஜூலை 6 வரை இலவச flu தடுப்பூசிகளைப் பெறலாம்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  11,067 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,777  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 23 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1174 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,366 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 5,921 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  4 பேர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,847  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT- இல் புதிதாக  1458 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT-இல் புதிதாக  302 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 29 June 2022 3:14pm
Updated 29 June 2022 3:23pm


Share this with family and friends