கோவிட் பரவல்: மீண்டும் கட்டுப்பாடு & முடக்கநிலை சாத்தியமில்லை என்கிறார் சுகாதார அமைச்சர்

கொரோனா வைரஸ் குறித்து ஜுலை மாதம் 08ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

NSW Police and Defence Force members on a compliance patrol at Campsie in Sydney, Thursday, August 19, 2021. NSW is racing to vaccinate as many people as quickly as it can as the daily COVID-19 case numbers spiral higher despite nearly eight weeks of lock

Queensland is encouraging older residents and immunosuppressed people to wear face masks until the end of August. (file) Source: AAP Image/Joel Carrett

விக்டோரியாவில் 9 பேர், குயின்ஸ்லாந்தில் 13 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 7 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 35 இறப்புகள் பதிவாகியுள்ளன.

NSW, விக்டோரியா, குயின்ஸ்லாந்து, டாஸ்மேனியா மற்றும் ACT பிராந்தியத்தில் கோவிட் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய கோவிட் அலையை அடுத்து ஆஸ்திரேலியாவில் மீண்டும் முகக்கவச கட்டுப்பாடு, கோவிட் கட்டுப்பாடுகள் மற்றும் முடக்கநிலையை அறிமுகப்படுத்த வாய்ப்பில்லை என்று சுகாதார அமைச்சர் Mark Butler ஏபிசி நியூஸிடம் கூறினார்.

பொதுமக்கள் தமது பாதுகாப்புக்கருதி, முகக்கவசத்தை அணிவது மற்றும் சமூக விலகலை கடைப்பிப்பது குறித்து தங்கள் சொந்த தெரிவுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

 இயந்திர கற்றல் கருவியைப் பயன்படுத்தி  "வளர்ந்து வரும் மற்றும் ஆபத்தான" கோவிட்-19 வகைகளை அடையாளம் காணும் ஒரு வேகமான முறையை CISRO உருவாக்கியுள்ளது. மனித உடலுக்குள் ஒரு புதிய மாறுபாடு எவ்வாறு செயல்படும் என்பதை  சிறப்பாகக் கணிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஓமிக்ரான் அலை தாக்கியபோது, பூர்வீக குடிமக்களிடையே கடுமையான நோய் விகிதம், ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய மக்கள்தொகையை விட 1.4 மடங்கு அதிகமாக இருந்தது என்று Australian Institute of Health and Welfare (AIHW) அதன் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த விக்டோரியா அரசு அனைத்து மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் 15 RAT உபகரணங்களை இலவசமாக வழங்குகிறது. சிறப்புப் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கூடுதலாக 15 RATகளைப் பெறுவார்கள்.

பள்ளிகளில் நேருக்கு நேர் கற்றலை உறுதி செய்ய 46.4 மில்லியன் RATகள் உதவும் என்று Premier Daniel Andrews கூறினார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள், ஆகஸ்ட் இறுதி வரை முகக்கவசத்தை அணியுமாறு அம்மாநில அரசு ஊக்குவித்துள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  12,768 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,676  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1589 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,980 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 6,217 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  மூவர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,809  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT- இல் புதிதாக  1701 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT-இல் புதிதாக  380 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 8 July 2022 2:47pm


Share this with family and friends