Latest

ஆஸ்திரேலியாவில் கோவிட் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது!

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

CORONAVIRUS COVID19

Passengers wearing face masks at Southern Cross Station in Melbourne. (file) Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

விக்டோரியாவில் 27 பேர், குயின்ஸ்லாந்தில் 14 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 22 பேர் என நாடுமுழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 73 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் கோவிட் காரணமாக மரணமடைந்தோர் எண்ணிக்கை இந்த வாரம் 13,000 ஐத் தாண்டியது. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 13,229 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன.

தற்போதைய ஓமிக்ரான் மற்றும் flu அலை முனகூட்டியே அவறறின் உச்சநிலையைக் கடந்துள்ளபோதிலும் மருத்துவமனை கட்டமைப்பு இன்னமும் கணிசமான அழுத்தங்களை எதிர்கொள்வதாக சுகாதார அமைச்சர் Mark Butler ABC-இடம் கூறினார். தொற்றுநோய் முடிவடையவில்லை எனவும் அமைச்சர் Mark Butler எச்சரித்தார்.

குழந்தைகளில் வைரஸ் தொற்றுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை குடும்பங்களுக்கு நினைவூட்டுவதற்காக, சுகாதார மற்றும் முதியோர் பராமரிப்புத் துறை புதிய பாடலை (I Got You) வெளியிட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியர்கள் சனிக்கிழமையன்று, காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை, தங்கள் கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை East Adelaide School, Whitefriars Catholic School, Berri Primary School, Pooraka Primary School மற்றும் Magill Primary School ஆகியவற்றில் பெறலாம்.

ஆகஸ்ட் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உலகளாவிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 24 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் கொரியாவை உள்ளடக்கிய மேற்கு பசிபிக் பிராந்தியத்தில், தொற்றுகள் 18 சதவீதம் குறைந்துள்ளன.

ஆகஸ்ட் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ஜப்பான், கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் அதிக தொற்றுகள் பதிவாகியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 6,899 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 3,857 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27 பேர்மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 2,746 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர்மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,760 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர்மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,062 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 402 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக 258 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்

என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

———————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 19 August 2022 5:08pm
Updated 19 August 2022 5:22pm
Source: SBS


Share this with family and friends