ஆஸ்திரேலியாவிடம் போதுமான அளவு கோவிட்-19 தடுப்பூசிகள் உள்ளதாக சுகாதார அமைச்சர் Mark Butler தெரிவித்தார்.
Pfizer மற்றும் Moderna உடனான தற்போதைய ஒப்பந்தங்கள் ஊடாக மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளைப் பெற முயற்சிப்பதாக அவர் ABCயிடம் கூறினார்.
"நாங்கள் தற்போது Novavax, Pfizer மற்றும் Moderna உடன் 2023 வரை ஒப்பந்தம் செய்துள்ளோம்" என்றும் Mark Butler கூறினார்.
கோவிட் தடுப்பூசி மற்றும் சிகிச்சைப் பொருட்கள் கொள்முதல் தொடர்பாக பேராசிரியர் Jane Halton-இன் சுயாதீன மதிப்பாய்வு தொடர்பில் பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
Moderna தடுப்பூசி உற்பத்தியாளருடனான தற்போதைய ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதியில் காலாவதியாகும் என்பதால், 2023 ஆம் ஆண்டில் Moderna தடுப்பூசியைப் பெறுவதற்கான தெரிவை ஆஸ்திரேலியா பரிசீலிக்க வேண்டும் என்று பேராசிரியர் Halton பரிந்துரைத்திருந்தார்.
Pfizer நிறுவனம் ResApp என்ற செயலியை $179 மில்லியனுக்கு வாங்கியுள்ளது.
பிரிஸ்பேனை தளமாகக் கொண்ட ResApp நிறுவனம், இருமல் சத்தங்களைக் கேட்டு கோவிட்-19 மற்றும் பிற சுவாச நோய்களைக் கண்டறியும் இந்த ஸ்மார்ட்போன் செயலியை உருவாக்கியுள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவு, குறைவான ஆஸ்திரேலியர்கள் சளி, flu மற்றும் கோவிட்-19 அறிகுறிகளை அனுபவிப்பதாகக் காட்டுகிறது.
2022 ஆகஸ்ட் 8 மற்றும் 28 க்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில், 36 சதவீத குடும்பங்கள் சளி, flu அல்லது கோவிட்-19 அறிகுறிகளை அனுபவித்ததாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் David Zago கூறினார். இது ஜூலை 2022 இல் 42 சதவீதமாக இருந்தது.
——————————————————————————————
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள். செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.