90 வயதுகளிலுள்ள மூதாட்டி ஒருவரே இவ்வாறு மரணமடைந்ததாகவும் இவருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப்பின்னணியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை ஆகக்குறைந்தது மேலும் 4 வாரங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் வாழ்பவர்களுக்கான முடக்கநிலை ஆகக்குறைந்தது ஆகஸ்ட் 28ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக Premier Gladys Berejikilian தெரிவித்தார்.
இப்பகுதிகளில் வாழ்பவர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்பதுடன் வேலை(அனுமதிபெற்றவர்கள் மாத்திரம்), பராமரிப்பு வழங்க அல்லது பெற, அத்தியாவசிய பொருட்களை வாங்க மற்றும் உடற்பயிற்சி போன்ற அத்தியாவசிய தேவையின்நிமித்தம் மாத்திரமே வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.
மேலும் இப்பகுதிகளில் வாழ்பவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு தமது உள்ளூராட்சி பகுதிக்குள் மட்டுமே பயணம்செய்ய முடியும். ஏதேனும் பொருட்களை அந்த உள்ளூராட்சி பகுதிக்குள் பெறமுடியாதபட்சத்தில் மாத்திரம் தமது வீடுகளிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்குள் பயணம்செய்ய முடியும்.
அதேநேரம் Fairfield, Canterbury-Bankstown, Liverpool, Blacktown மற்றும் Cumberland ஆகிய உள்ளூராட்சி பகுதிகளில் வாழும் பணியாளர்களில் அனுமதியளிக்கப்பட்டவர்கள் மாத்திரம் தமது உள்ளூராட்சி பகுதிகளைவிட்டு வெளயே செல்லமுடியும் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள பின்னணியில் தற்போது Parramatta, Campbelltown மற்றும் Georges River பகுதிகளுக்கும் இக்கட்டுப்பாடு கொண்டுவரப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு மற்றும் மேற்கு சிட்னி பகுதிகள் காணப்படுவதாகவும் இப்பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முடக்கநிலையை சரியாக பின்பற்றுமாறும் அநாவசியமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லவேண்டாம் எனவும் மாநில Premier Gladys Berejikilian கோரிக்கைவிடுத்தார்.
இதேவேளை புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 177 பேரில் 74 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 103 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இவர்களில் ஆகக்குறைந்தது 46 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 94,532 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச விமானசேவைக் குழுவினரை ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்ட 60 வயதுகளிலுள்ள ஓட்டுனர் ஒருவருக்கு முதன்முதலாக மிகவும் ஆபத்தான திரிபடைந்த Delta வகை தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இப்பரவல் ஆரம்பித்திருந்தது.
புதிதாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருவதால் இவர்கள் சென்றுவந்த இடங்களின் பட்டியலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றாளர்கள் சென்றுவந்த இடங்களின் முழுமையான பட்டியலை என்ற இணையமுகவரியில் பார்வையிடலாம்.
இதுஒருபுறமிருக்க விக்டோரியா மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும் 9 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 8 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், நோய்த்தொற்றுக்காலம் முழுவதும் இவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மற்றையநபர் Moonee Valley racecourse drive-through testing centre-இல் பணிபுரிந்தவர் எனவும் இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் மாநில சுகாதார அமைச்சர் Martin Foley தெரிவித்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் 35,862 கோவிட் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் அதேநேரம் சிறியளவிலான அறிகுறி தோன்றினாலும் உடனடியாக சோதனைக்கு உட்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பன் திரும்பிய குடும்பம் ஒன்றினூடாகவும் இப்பரவல் விக்டோரியாவில் ஆரம்பித்திருந்தது.
விக்டோரியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை நீக்கப்பட்டு பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவந்துள்ளன:
- வீடுகளில் விருந்தினர்களுக்கு அனுமதியில்லை. இக்கட்டுப்பாடு ஆகக்குறைந்தது இன்னும் இருவாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
- வெளியரங்குகளிலும் உள்ளரங்குகளிலும் பொதுப்போக்குவரத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும்.
- 4 சதுரமீட்டர்களுக்கு ஒரு நபர் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வணிகங்கள், உடற்பயிற்சிக்கூடங்கள், உணவகங்கள், Live music venues, dance classes மீண்டும் இயங்க ஆரம்பிக்கலாம்.
- வெளியிடங்களில் 10 பேர் வரை மட்டுமே ஒன்றுகூட முடியும்.
- பள்ளிகள் மீண்டும் நேரடி கற்றல் செயற்பாட்டிற்கு மாறலாம்.
இதுதவிர வேறு என்னென்ன கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன என்ற விவரங்களை மாநில அரசின் பார்வையிடலாம்.
இதேவேளை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிஸ்பேனிலுள்ள விடுதியொன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்துக்கொண்டு வெளியேறிய நபர் ஒருவருக்கே தற்போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர் நோய்த்தொற்றுடன் சுமார் 6 நாட்கள் சமூகத்தில் நடமாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Highlights
- செய்தி மற்றும் தகவல்களை 63 மொழிகளில் பெற்றுக்கொள்ள:
- ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களுக்கு: , , , , , , .
- கோவிட் தடுப்பூசி குறித்த தகவல்களை உங்கள் மொழியில் பெற்றிட: .
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாகும்.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.