ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரிப்பு! மேலும் 71 பேர் பலி!!

கொரோனா வைரஸ் குறித்து மே மாதம் 26ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Members of the Indigenous community are seen receiving a Covid-19 vaccine at a pop-up vaccination clinic at the National Centre of Indigenous Excellence in Redfern, Sydney, Saturday, September 4, 2021. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING

Source: AAP

நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 71 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI), வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 16-64 வயதுடையவர்களும், ஊனமுற்றவர்களும், மே 30 முதல் குளிர்கால COVID-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளது.

மூன்று சுற்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ள-வேறு நோய்நிலைமை எதுவுமற்ற- மக்களுக்கு (வயது 16-64) நான்காவது அல்லது குளிர்கால பூஸ்டர் தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை என்று (ATAGI) தெரிவித்துள்ளது. இதில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற ஆபத்து காரணிகள் இல்லாத கர்ப்பிணிப் பெண்களும் அடங்குகின்றனர்.

நான்காவது சுற்று தடுப்பூசி தற்போது, 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், முதியோர் பராமரிப்பு அல்லது ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்கள், கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் மற்றும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பூர்வகுடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் உள்ளிட்டவர்களுக்கு கிடைக்கிறது.

குயின்ஸ்லாந்தில் அரசு நடத்தும் காய்ச்சல் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் கோவிட்-19 மற்றும் FLU சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  10,926 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 30 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,421  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 946 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,246 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 11,832 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இருவர் மரணமடைந்தனர்.(இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன).  

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,837  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

ACT- இல் புதிதாக  911 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT-இல் புதிதாக  330 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 26 May 2022 3:46pm
Updated 26 May 2022 4:00pm


Share this with family and friends