ஆஸ்திரேலியாவில் முதல்தடவையாக புதியவகை XE கோவிட் தொற்று கண்டறியப்பட்டது!

கொரோனா வைரஸ் குறித்து ஏப்ரல் மாதம் 15ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Queues of people are seen at the Virgin and Jetstar departure terminal at at Sydney Domestic Airport in Sydney, Wednesday, April 13, 2022. (AAP Image/Bianca De Marchi) NO ARCHIVING

Passengers wait at Sydney Airport in New South Wales. (file) Source: AAP Image/Bianca De Marchi

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதல்தடவையாக புதிய XE வகை கொரோனா நோய்த்தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா வந்தவரிடமே இந்நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. XE குறித்த மேலதிக விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

விக்டோரிய சுகாதார அதிகாரிகள் கழிவு நீர் மாதிரிகளில் Omicron வைரஸின் புதிய துணைத் திரிபைக் கண்டறிந்துள்ளனர். Tullamarine பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட கழிவு நீர் மாதிரிகளில்  BA.4 அல்லது BA.5 துணைத்திரிபு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, பெல்ஜியம், டென்மார்க், UK மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த துணைத்திரிபு சமீபத்தில் குறைந்த எண்ணிக்கையில் கண்டறியப்பட்டது.

தெற்கு ஆஸ்திரேலியா ஏப்ரல் 15 ஆம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் முகக்கவச கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

எனினும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள், முதியோர் பராமரிப்பு மையங்கள், சிறைச்சாலைகள், சீர்திருத்த மையங்கள் அல்லது பயிற்சி மையங்கள் மற்றும் பொது அல்லது தனியார் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

அதுமட்டுமல்லாமல் சுகாதார சேவைகள், மருந்தகங்கள், pathology மையங்கள், பயணிகள் போக்குவரத்து சேவைகள் (டாக்சிகள், ரைட்ஷேர் மற்றும் பிற வாடகை அல்லது வாடகை வாகன ஏற்பாடுகள் உட்பட) விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 33 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 15,367 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16 பேர் மரணமடைந்தனர். 1,485 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 69 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,664 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர். 374 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 1,489 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  55 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

NT- இல் புதிதாக 448 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 7,673 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர். 574 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 21 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 7990 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். (இந்த மரணம் நேற்றுமுன்தினம் பதிவானது)  197 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,062 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர். 209 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 15 April 2022 3:30pm
Updated 15 April 2022 3:43pm


Share this with family and friends