Latest

'Long COVID-ஐ ஒரு இயலாமையாக அங்கீகரிப்பது தொடர்பில் ஆஸ்திரேலியா பரிசீலிக்கலாம்'

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 6ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

NSW CORONAVIRUS COVID19

People at a pop-up COVID vaccination clinic in Sydney's Lakemba suburb. (file) Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE

விக்டோரியாவில் 25 பேர், குயின்ஸ்லாந்தில் 8 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 27 பேர் என நாடுமுழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 66 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Long Covid-ஐ இயலாமையாக அங்கீகரிப்பதை ஆஸ்திரேலியா பரிசீலிக்கலாம் எனவும், இது அமெரிக்கா உட்பட சில நாடுகளில் செய்யப்பட்டுள்ளதாகவும் லேபர் MP Dr Mike Freelander தெரிவித்துள்ளார்.

Long Covid மற்றும் மறுநோய் தாக்கங்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக Dr Mike Freelander உள்ளார்.

உடல் மற்றும் மனநல ஆதரவு உட்பட பலதரப்பட்ட உதவிகளை வழங்கும்வகையிலான Long Covid கிளினிக் ஆஸ்திரேலியாவுக்கு தேவைப்படும் என்று Dr Mike Freelander, ஏபிசியின் RN Breakfast -இடம் கூறினார்.

ஆம்புலன்சுக்காக காத்திருந்த 33 பேர், கடந்த இரண்டு ஆண்டுகளில் மரணமடைந்த விவகாரம் தொடர்பில். விக்டோரிய மாநில Premier Daniel Andrews மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக்கோரியுள்ளார்.

தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது அவசரகால அழைப்புகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, இந்த இறப்புகளுக்கு காரணம் என Premier Daniel Andrews குற்றம் சாட்டினார்.
கோவிட் தடுப்பூசியின் முதல் சுற்று ஆண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதை ஆஸ்திரேலிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முன்னணி எழுத்தாளரும் மெல்பன் பல்கலைக்கழகப் பேராசிரியருமான Cassandra Szoeke கூறுகையில், ஆண்களுடன் ஒப்பிடும்போது தடுப்பூசிகளின் எதிர்மறையான பக்க விளைவுகளை பெண்கள் அனுபவிப்பது மிகவும் பொதுவானது என்றார்.

"குறிப்பாக, AstraZeneca மற்றும் Janssen தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பெண்களிடையே குருதி உறைதல் நிகழ்வுகள் பொதுவாகப் பதிவாகியுள்ளன" என்று அவர் கூறினார்.

கோவிடானது அதிகளவான புற்றுநோய், dementia மற்றும் நீரிழிவு இறப்பு விகிதங்களை உண்டாக்குகிறது என்பதாக ஆஸ்திரேலிய புள்ளி விவரவியல் பணியகத்தின் சமீபத்திய தற்காலிக இறப்பு அறிக்கை காட்டுகிறது.

ஆஸ்திரேலியாவில் ஜனவரி மற்றும் மே இடையே 75,593 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஐந்து ஆண்டுகளின் சராசரியை விட 16.6 சதவீதம் அதிகமாகும்.

ஆஸ்திரேலியாவில் ஜனவரி மற்றும் மே இடையே 75,593 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஐந்து ஆண்டுகளின் சராசரியை விட 16.6 சதவீதம் அதிகமாகும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 3,000 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 2,375 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர்மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 1,631 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8 பேர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 615 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐவர் மரணமடைந்தனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

ACT- இல் புதிதாக 160 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

NT- இல் புதிதாக 111 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
—————————————————————————————-
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 6 September 2022 2:10pm
Updated 6 September 2022 3:15pm
Source: SBS


Share this with family and friends