NSW மாநிலத்தில் கடுமையான அபராதம் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

NSW Police and Detectives at the scene in Dulwich Hill, following a fatal stabbing in Marrickville, Sydney, Friday, August 13, 2021. A police operation is underway after a man was stabbed to death at Marrickville. (AAP Image/Dan Himbrechts) NO ARCHIVING

NSW Police Force have an increased presence across Greater Sydney, backed up by 500 additional Australian Defence Force personnel from 16 August. Source: AAP Image/Dan Himbrechts

  • NSW மாநிலத்தில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு
  • மெல்பன் நகரில் 450ற்கும் மேற்பட்ட இடங்களில் தொற்று ஏற்பட்டிருக்கிறது
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தொற்றுள்ளவர்கள் யாரும் சமூகத்தில் நடமாட வில்லை
  • ACTயில் தற்போது ஏழு பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது
 


 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 466 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் நான்கு பேர் இறந்துள்ளார்கள்.  தொற்றுள்ளவர்களில் குறைந்தது 68 பேர், சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.

எதிர்வரும் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் NSW காவல்துறையுடன் கூடுதலாக 500 ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை வீரர்களும் இணைந்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவார்கள் என்று Premier Gladys Berejiklian அறிவித்தார்.

சிட்னி பெரு நகரை விட்டு வெளியேற விரும்புபவர்கள் அதற்கான வேண்டும்.  சிட்னி பெரு நகரில் வசிப்பவர்கள் அவர்கள் வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு தூரமே பயணிக்க முடியும்.

எதிர்வரும் திங்கட்கிழமை, ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தொற்று அதிகமாகப் பரவியுள்ள களில் வசிப்பவர்கள் உடற்பயிற்சி மற்றும் குழந்தைகளை மேற்பார்வையிட மட்டுமே வெளியில் செல்ல முடியும்; வெளிப்புற பொழுதுபோக்கு நடவடிக்கைகள் எதற்கும் அனுமதியில்லை.  தனியாக வசிப்பவர்கள் என்ற இணையத்தளத்தில் பதிவு செய்தால், பரிந்துரைக்கப்பட்ட ஒருவர் அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பொது சுகாதார உத்தரவுகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம், 5,000 டொலர்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

என்ற தரவுகளை காணலாம்.

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 21 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் மூன்று பேருக்கு ஏற்பட்ட தொற்று, ஏற்கனவே அறியப்பட்ட தொற்றுகளுடன் தொடர்புடையவை அல்ல.  அத்துடன், தொற்றுள்ளவர்களில் பத்துப் பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.

மெல்பனில் உள்ள Chadstone shopping centreஇல் தொற்று அதிகமாகப் பரவியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், Highpoint shopping centre மற்றும் பல பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 450ற்கும் மேற்பட்ட ஏற்பட்டிருக்கிறது.

என்ற தரவுகளை காணலாம்.

 

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக ஆறு பேருக்கு சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது
  • Australian Capital Territory – ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தற்போது தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.



ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் கோவிட் சோதனையை எங்கே மேற்கொள்ளலாம் என்ற விவரங்களை கீழுள்ள இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

 
 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் கோவிட் பேரிடர்கால கொடுப்பனவு எவ்வாறு உள்ளது என்பதை கீழுள்ள இணைப்புக்களுக்குச் சென்று தெரிந்துகொள்ளலாம்.

 
 
ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்திலும் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான விடயங்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்.

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்லவேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதிபெறவேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களுக்கு  என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப்போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக்கொள்ளலாம்

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 14 August 2021 9:35pm
Updated 12 August 2022 3:06pm
By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS


Share this with family and friends