ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் Barnaby Joyce-க்கு கோவிட் தொற்று!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 9ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Deputy Prime Minister Barnaby Joyce at a press conference at Parliament House in Canberra, Wednesday, November 24, 2021. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

Deputy Prime Minister Barnaby Joyce has tested positive for COVID-19 on his US tour. (File Photo) Source: AAP Image/Mick Tsikas

அமெரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் Barnaby Joyce-க்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று குணமடையும்வரை அவர் அமெரிக்காவிலேயே தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். 

குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதமானோர் கோவிட் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டுள்ளனர்.
குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா மாநிலங்களில் Omicron தொற்றுக்குள்ளான முதல் நபர்கள் இனங்காணப்பட்டுள்ள பின்னணியில்,  ஆஸ்திரேலியாவில் ஆதிக்கம் செலுத்தும் கோவிட்-19 திரிபாக, Omicron மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சிட்னியில் இனங்காணப்பட்டுள்ள கோவிட் தொற்றாளர்களில் 44 பேர் pub trivia night பரவலுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் எவருக்கேனும் புதிய Omicron வகை நோய்த்தொற்று உள்ளதா என்பது தொடர்பில் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

NSW மாநிலத்தில் புதிதாக எட்டுப் பேருக்கு Omicron தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து NSW மாநிலத்தில் Omicron தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை இப்போது 42 ஆக அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பதற்காக இங்கு வரவேண்டுமெனில், 'எல்லோரையும் போல'  Novac Djokovic- உம், தடுப்பூசி விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் Scott Morrison கூறியுள்ளார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,232 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 9  பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 420 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 9 December 2021 2:49pm
Updated 9 December 2021 3:00pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends