விக்டோரியாவில் கோவிட்-19 தொடர்பிலான மரணங்கள் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் குறித்து ஜுன் மாதம் 8ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

COVID-19, última hora: Las muertes se disparan en Victoria y NSW actualiza sus regulaciones

COVID-19, última hora: Las muertes se disparan en Victoria y NSW actualiza sus regulaciones Source: Asanka Ratnayake/Getty Images

விக்டோரியாவில் 25 பேர், குயின்ஸ்லாந்தில் 15 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 10 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 59 இறப்புகள் பதிவாகியுள்ளன.

விக்டோரியாவில் ஏப்ரல் 4 ஆம் தேதிக்குப் பிறகு பதிவான அதிகூடிய தினசரி இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.

NSW மாநிலம் தனது கோவிட்-19 விதிமுறைகளை புதுப்பித்துள்ளது. இன்று (ஜூன் 8) முதல், இரவு விடுதிகள், ஸ்ட்ரிப் கிளப்புகள் மற்றும் பெரிய உள்ளக இசை விழாக்களில் check-in செய்யத் தேவையில்லை. இருப்பினும், வணிகங்களும் நிறுவனங்களும் தங்கள் சொந்த விருப்பப்படி அவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஒரு பெரிய உள்ளக இசை விழாவில் கலந்து கொள்ளும்போது நீங்கள் இனி முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை. அதேபோன்று தடுப்பூசி போடாதவர்களும் இவ்விழாக்களில் பங்கேற்கலாம். 

நேற்றையதினம் ACT அரசு பொது சுகாதார திருத்த சட்டமுன்வடிவு 2021 (எண் 2) ஐ சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. கோவிட் தொடர்பிலான பொது சுகாதார அபாயங்களிலிருந்து தனது குடிமக்களைத் தொடர்ந்து பாதுகாக்க ACT அரசுக்கு இச்சட்டத்திருத்தம் உதவும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  7,825 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 9,519  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 667 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,257 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 7,720 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  8 பேர் மரணமடைந்தனர்.(இம்மரணங்கள் முன்னைய தேதிகளில் நேர்ந்துள்ளன).  

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,995  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT- இல் புதிதாக  821 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

NT-இல் புதிதாக  254 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: 

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: 

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 8 June 2022 4:39pm


Share this with family and friends