விக்டோரிய மாநிலம் விரைவில் கோவிட் பரவலின் "உச்சத்தை" எட்டவுள்ளது!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 17ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Victorian Chief Health Officer Brett Sutton addresses the media during a press conference in Melbourne.

Victorian Chief Health Officer Brett Sutton addresses the media during a press conference in Melbourne. Source: AAP

  • சமூகத்தில் வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுவதால், வரும் நாட்களில் NSW மாநிலத்தில் கோவிட் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என மாநில தலைமை சுகாதார அதிகாரி  Kerry Chant எச்சரித்துள்ளார்.
  • NSW மாநிலம் கோவிட் தொடர்பான 17 இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது.
  • அதேநேரம் NSW மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களினதும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுபவர்களினதும் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
  • Omicron திரிபிற்கு எதிராக "உங்கள் பாதுகாப்பின் அளவை உயர்த்துவதற்கு booster மிகவும் முக்கியமானது" என்று Dr Chant மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
  • சமூகத்தில் கண்டறியப்படாத நோய்த்தொற்றுகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற பின்னணியில், மாநிலம் விரைவில் கோவிட் பரவலின் "உச்சத்தை" எட்டும் என விக்டோரிய தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton கூறியுள்ளார்.
  • விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 22,429 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அதேநேரம் 6 பேர் மரணமடைந்தனர்.
  • மூன்று சுற்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுடன் ஒப்பிடும் போது,  தடுப்பூசி போடாத ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 24 மடங்கு அதிகம் என குயின்ஸ்லாந்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பான ACCC,  RAT கருவிகளின் தொடர்ச்சியான விலையேற்றம் குறித்து கவலை வெளியிட்டுள்ளது.
  • விக்டோரியாவிலுள்ள பல் கலாச்சார சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை அதிகரிக்கவென 1.2 மில்லியன் டொலர் செலவிலான முன்முயற்சிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும்  29,504 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 17 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 22,429 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  6  பேர்  மரணமடைந்தனர். 

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 1,037 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 15,122 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  7 பேர் மரணமடைந்தனர்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 17 January 2022 1:58pm
Updated 17 January 2022 2:31pm


Share this with family and friends