விக்டோரியாவில் 52 பேர், குயின்ஸ்லாந்தில் 35 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 30 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 133 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த 52 இறப்புகளில் 50 இறப்புகள் இதற்கு முந்தைய தேதிகளில் பதிவானவை என விக்டோரியா அரசு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட "வீணான மற்றும் பயனற்ற" COVIDSafe செயலியை ரத்து செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் Mark Butler கூறினார்.
இரு கோவிட் தொற்றாளர்கள் மற்றும் 17 நெருங்கிய தொடர்புகளை மட்டுமே அடையாளம் காண உதவிய இச்செயலிக்கு முந்தைய அரசு $21 மில்லியன்களை செலவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
ஆகஸ்ட் 15 முதல், மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் தற்போதுள்ள drive-through சேகரிப்பு மையங்கள், பெருநகரங்களில் உள்ள கோவிட்-19 தடுப்பூசி மையங்கள் மற்றும் பிராந்திய பகுதிகளில் உள்ள கோவிட்-19 பரிசோதனை மையங்கள் ஆகியவற்றிலிருந்து 20 இலவச RAT-களை பெற்றுக்கொள்ளலாம்.
Japanese encephalitis தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான தகுதி அளவுகோல்களை விக்டோரியா விரிவுபடுத்தியுள்ளது.
Mildura, Swan Hill, Gannawarra, Campaspe, Moira, Greater Shepparton, Indigo மற்றும் Wodonga உள்ளூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் அல்லது பணிபுரியும் 50 முதல் 65 வயதுக்குட்பட்ட குடியிருப்பாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட GPகள் மற்றும் சில கோவிட்-19 தடுப்பூசி மையங்களில் இருந்து இலவச தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம்.
ACT-இல் concession card வைத்திருப்பவர்கள் இப்போது தங்கள் உள்ளூர் நூலகத்திலிருந்து மூன்று இலவச RAT-களைப் பெறலாம்.
இருப்பினும், கோவிட்-19 அறிகுறிகள் உள்ளவர்கள் Garran Surge Centreஇல் இருந்து RATஐப் பெற வேண்டும் அல்லது PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
Massachusetts Institute of Technology ஆராய்ச்சியாளர்கள், தடுப்பூசி, தொற்று அல்லது இரண்டின் கலவையிலிருந்து கோவிட்டுக்கான எதிர்ப்பு சக்தியின் அளவைக் கண்டறியும் "எளிதாக பயன்படுத்தக்கூடிய" சோதனையை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இந்த சோதனை இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 11,356 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 30 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 5,898 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 52 பேர் மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 3,809 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 35 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,889 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,881 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 பேர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 669 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
ACT- இல் புதிதாக 556 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
NT-இல் 205 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.