Booster தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளி 4 மாதங்களாக குறைக்கப்பட்டது!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 24ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

NSW COVID-19 testing in Redfern

NSW COVID-19 testing in Redfern Source: AAP Image/MICK TSIKAS

  • ATAGI-இன் ஆலோசனையைத் தொடர்ந்து, booster கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியை நான்கு மாதங்களாக குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது.
  • இக்கால இடைவெளி ஜனவரி 4 முதல் நான்கு மாதங்களாக குறைக்கப்படும் எனவும், ஜனவரி 31 முதல் மூன்று மாதங்களாக குறைக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் Greg Hunt கூறினார்.
  • கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிக முக்கிய விடயம் இல்லை என்றபோதிலும், இது தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மக்களை ஊக்குவிப்பதாக தலைமை சுகாதார அதிகாரி  Paul Kelly  தெரிவித்தார். 
  • NSW மாநிலத்திலுள்ளவர்கள் தமது வீடுகளைத் தவிர, ஏனைய உள்ளரங்குகளில் முகக்கவசம் அணியவேண்டுமென்ற கட்டுப்பாடு இன்று முதல் ஜனவரி 27 வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விருந்தோம்பல்துறைசார் இடங்களில் density limit மற்றும் கட்டாய QR check-in  கட்டுப்பாடுகள் டிசம்பர் 27 முதல் ஜனவரி 27 வரை நடைமுறையில் இருக்கும்.
  • விக்டோரியா மாநிலம் நேற்றுமுதல் முகக்கவச கட்டுப்பாட்டினை நடைமுறைப்படுத்தியுள்ளது.
  • மேற்கு ஆஸ்திரேலியா டிசம்பர் 28 வரை அனைத்து பொது உட்புற அமைப்புகள் மற்றும் இரவு விடுதிகளுக்கு முகக்கவசங்களை கட்டாயமாக்குகிறது.
  • விமானக் குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக நேர்ந்துள்ளதால் விக்டோரிய மாநிலத்தில் பயணிகள் தாமதத்தை எதிர்கொள்கின்றனர்.
  • குயின்ஸ்லாந்தில் இருந்து பெர்த் வந்தவரால் கொரோனா வைரஸ் பரவியதா என்பதைக் கண்டறியும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,095 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 8 பேர் மரணமடைந்தனர்.

New South Wales மாநிலத்தில் புதிதாக 5,612 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஒருவர்  மரணமடைந்தார்.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 27 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT- இல் புதிதாக 102 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 589 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 24 December 2021 12:15pm
Updated 24 December 2021 12:27pm
By SBS/ALC Content
Source: SBS


Share this with family and friends