ஆஸ்திரேலிய எல்லைக்கட்டுப்பாடு இன்று முதல் மேலும் தளர்த்தப்பட்டது!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 15ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

People arrive at Hobart Airport in Hobart, Wednesday, December 15, 2021. Tasmania has reopened to all fully-vaccinated travellers from mainland states and territories. (AAP Image/Rob Blakers) NO ARCHIVING

People arrive at Hobart Airport in Hobart, Wednesday, December 15, 2021. Source: AAP

  • இன்று முதல் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளநிலையில், வெளிநாட்டு மாணவர்கள், skilled workers, மனிதாபிமான விசாவின்கீழ் உள்வாங்கப்படும் அகதிகள் மற்றும் ஏனைய பிரிவு ஆஸ்திரேலிய விசா வைத்திருப்பவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால், ஆஸ்திரேலிய அரசிடமிருந்து travel exemption-விதிவிலக்கு அனுமதி பெறாமலேயே இங்கு வரமுடியும்.
  • 22 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மேனியா தனது எல்லையை ஆஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளுக்கு மீண்டும் திறந்துள்ளது.
  • விக்டோரிய மாநிலத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்காதவர்களும், இனி அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை நிலையங்கள், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றுக்குச் செல்லலாம் என்பதுடன் real estate சேவைகளையும் பயன்படுத்தலாம். 
  • NSW மாநிலத்தில் புதிதாக கோவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
  • NSW மாநிலத்தில் புதிதாக  25 Omicron தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து அங்கு Omicron  தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 110-ஆக அதிகரித்துள்ளது. 
  • NSW மாநிலத்தில் அடுத்த மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு 25,000 புதிய கோவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்படலாம் என University of NSW ஆய்வு தெரிவிப்பதாக NSW சுகாதார அமைச்சர் Brad Hazzard கூறியுள்ளார்.
  • கொரோனா வைரஸின் வேறெந்த திரிபைவிடவும் 'அதிகமான வேகத்தில்' Omicron பரவுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,405 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும்  3 பேர் உயிரிழந்துள்ளனர். 

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1360 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ACT- இல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு  என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்   இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

 
 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

 
 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share
Published 15 December 2021 3:01pm
Updated 15 December 2021 3:04pm


Share this with family and friends