Latest

'Centaurus' திரிபினால் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 22ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

NSW CORONAVIRUS COVID19

NSW Health said early evidence suggests infections from BA.2.75 are rising in the state. (file) Source: AAP / STEVEN SAPHORE/AAPIMAGE

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் BA.2.75 திரிபினால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் அதிகரித்துவருவதாக ஆரம்பக்கட்ட தரவுகள் தெரிவிக்கின்ற பின்னணியில் ஓமிக்ரானின் BA.2 துணைத்திரிபுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக NSW Health கூறியுள்ளது.

PCR மூலம் இனங்காணப்படும் தொற்றுக்களில் 17.5 சதவிகிதம் BA.2.75 என்றும், 76 சதவிகிதம் BA.5 என்றும் சமீபத்திய தரவு காட்டுகிறது.

BA.2.75 திரிபினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த மூன்று வாரங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் மற்ற அனைத்து துணை திரிபுகளால் ஏற்படும் தொற்றுகள் குறைந்து வருகிறது.

"Centaurus" என அழைக்கப்படும் BA.2.75 திரிபானது BA.5ஐ விட அதிகமாக பரவக்கூடியது என்பதுடன் அனைத்து சிகிச்சைகளிலிருந்தும் தப்பிப்பிழைக்கக்கூடியது என சில ஆய்வுகள் காட்டுகின்றன.

ஒட்டுமொத்தமாக NSW மாநிலத்தின் தற்போதைய கோவிட் அலையில் BA.5 மற்றும் BA.4 திரிபுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும் கடந்த வாரத்தில் குறைந்துள்ளது.
விக்டோரியா மாநிலத்தவர்களும் இனி பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணியத்தேவையில்லை.

விக்டோரியர்கள் இன்று (வியாழக்கிழமை) இரவு 11:59 மணி முதல் பேருந்துகள், ரயில்கள், டாக்சிகள், rideshare சேவைகள் மற்றும் சுற்றுலா வாகனங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை.

கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பைவிட, நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான முடக்கநிலை, மக்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி காட்டுகிறது.

மில்லியன் கணக்கான புரத அடிப்படையிலான Novavax கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாக, Sydney Morning Herald மற்றும் The Age ஆகியவை தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலியாவிற்கு விநியோகிக்கப்பட்ட 13.3 மில்லியன் தடுப்பூசிகளில், இதுவரை 210,000 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

உலகளாவிய ரீதியில் புதிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நிலையானதாக காணப்படுகின்றபோதிலும், செப்டம்பர் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இறப்புகள் 17 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜப்பான், அமெரிக்கா, கொரியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அதிகளவில் கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.
——————————————————————————————

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Published 22 September 2022 3:30pm
Updated 22 September 2022 3:43pm
Source: SBS


Share this with family and friends