விக்டோரியாவில் 11 பேர், குயின்ஸ்லாந்தில் 24 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 21 பேர் என நாடுமுழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 62 இறப்புகள் பதிவாகியுள்ளன.
ஜூன் காலாண்டில் (ஏப்ரல் 1 - 30 ஜூன்) ஆஸ்திரேலியப் பொருளாதாரம் 0.9 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளிவிவரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவு காட்டுகிறது.
தொற்றுநோய்க்கு முந்தைய விகிதங்களைநோக்கி பொருளாதாரவளர்ச்சி திரும்பிவருவதாக புள்ளிவிவரவியல் திணைக்களம் கூறியுள்ளது.
கோவிட் பரவல் தொடங்கியதிலிருந்து 1,700 ஆஸ்திரேலிய குழந்தைகள் குறைந்தது ஒரு பெற்றோரையாவது இத்தொற்றுநோய் காரணமாக இழந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
JAMA Network இல் வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய ஆய்வின்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக 10.5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஒன்று அல்லது இரு பெற்றோரை இழந்துள்ளனர்.
பங்களாதேஷ், இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், நேபாளம், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, கென்யா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர்.
தற்போதைய கொரோனா வைரஸ் மாறுபாடுகளுக்கு எதிராக புதிய பூஸ்டர்கள் பாதுகாப்பை வழங்குவதாகக் கூறப்படுவதால், கோவிட் தடுப்பூசியை வருடாந்தம் வழங்கும் திட்டம் தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்துவருகிறது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 3,666 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 21 பேர் மரணமடைந்தனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 2,327 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர்மரணமடைந்தனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 1,776 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 24 பேர் மரணமடைந்தனர்.
மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1335 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 646 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நால்வர் மரணமடைந்தனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 166 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ACT- இல் புதிதாக 138 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
NT- இல் புதிதாக 87 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.