18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான புதிய Moderna பூஸ்டர் தடுப்பூசியை ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.
இப்புதிய பூஸ்டர் தடுப்பூசி முதன்மைத் திரிபு மற்றும் Omicronஇன் பல துணைத்திரிபுகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குவதாக குறிப்பிடப்படுகிறது.
நாட்டை வந்தடைந்த முதல் தொகுதி Moderna பூஸ்டர் தடுப்பூசிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு
வருவதாக சுகாதார அமைச்சர் Mark Butler தெரிவித்தார்.
Moderna பூஸ்டர் கோவிட்-19 தடுப்பூசியின் இருப்புக்கள் தீர்ந்தவுடன், புதிய தொகுதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Modernaவின் புதிய தடுப்பூசி இதற்கு முந்தைய தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது BA.1 மற்றும் BA.4/BA.5 உட்பட பல omciron துணை திரிபுகளுக்கு எதிராக, 1.6 முதல் 1.9 மடங்கு அதிக நோயெதிர்ப்பு தன்மையை உருவாக்குவதாக, நோய்த்தடுப்புக்கான ஆஸ்திரேலிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) தெரிவித்துள்ளது.
புதிய Moderna தடுப்பூசியை இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியாகப் போட்டுக்கொண்டவர்களில், பாரதூரமான பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், வெறுமனே ஊசி போட்ட இடத்தில் வலி, சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை மட்டுமே பொதுவாக ஏற்பட்டதாகவும் ATAGI தெரிவித்துள்ளது.
புதிய Moderna தடுப்பூசியின் பாதுகாப்பு மற்ற Moderna mRNA தடுப்பூசிகளிலிருந்து வேறுபட்டது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை என ATAGI குறிப்பிட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசிகளுக்கான தற்போதைய பரிந்துரையை ATAGI தொடர்ந்தும் பேணிவருகிறது.
30-49 வயதுடையவர்களில், வேறு ஆபத்துக் காரணிகள் அற்றவர்கள், தங்களுக்கான இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவது இன்னும் அவர்களது விருப்பத்தெரிவுக்கு உட்பட்டது.
அதேநேரம் 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள்.
கோவிட் தொற்று ஏற்பட்டு ஐந்து நாட்களுக்குப் பிறகு சுய-தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துக்கொள்பவர்கள், தங்கள் வீட்டிற்கு வெளியே செல்லும்போது, மேலும் இரண்டு நாட்களுக்கு முகக்கவசங்களை அணிய வேண்டும் என Northern Territory கூறியுள்ளது.
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.